news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு ஆதவ் அர்ஜுனா அழைப்பு
tv

Also Watch

tv

Read this

விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு ஆதவ் அர்ஜுனா அழைப்பு

பின்வாசல் வழியாக முதல்வராக முயன்றார் இபிஎஸ்

1

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைய விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து உள்ளார்.

"பின்வாசல் வழியாக முதல்வராக முயன்றார் இபிஎஸ்"
இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது;
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு, நல்ல எதிர்க்கட்சியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர திமுக - அதிமுக இணைந்து செயல்பட்டன. திமுக உடன் இணைந்து பின்புற வாசல் வழியாக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்த எடப்பாடி பழனிசாமி, உடனடியாக கட்சியை காப்பாற்ற வேண்டும்.

SPV அணிக்கு அமைச்சர் பதவி உண்டா?
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்புக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படுமா? என கேள்வி எழுகிறது. அதிமுக அதிருப்தி அணியுடன் தோழமையுடன் இருப்போம். அதிமுகவை தமிழக வெற்றிக் கழகம் தோழமையோடுதான் அணுகுகிறது.

திருமாவளவனை அழைக்கிறோம்
சமூகநீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும். அமைச்சரவையில் இடம் பெற விசிக தலைவர் திருமாவளவனை அழைக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார். காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார்.
இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"தங்கள் தவறை மறைக்க இபிஎஸ் மீது பழி"

0
1 hr 6 mins agoshare
"தங்கள் தவறை மறைக்க இபிஎஸ் மீது பழி"button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved