Also Watch
Read this

சென்னை FC கால்பந்தாட்ட கிளப் உறுப்பினர்களுக்காக, பிரியாணி சமைத்துக் கொடுத்து, நடிகர் அஜித் குமார் அசத்தி உள்ளார்.

அஜித் மகனின்...
நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக், கால்பந்தாட்டம் மீது அதிக விருப்பம் கொண்டவர். அவர், சென்னை FC கிளப்பில் தான் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், மனைவி ஷாலினியுடன் அந்த கிளப்பிற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்துக் கொடுத்து உள்ளார் அஜித்.

வைரலாகி வரும் வீடியோ
அஜித்குமார் பொறுமையாக பிரியாணி செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

அஜித் சமையலில் பிசியாக இருந்தபோது, செல்ஃபிக்கு போஸ் கொடுக்கச் சொன்னார் ஷாலினி. அஜித் இங்க பாருன்னு, ஷாலினி சொல்ல அவரோ எங்கனு கேட்க, அங்கிருந்தவர்கள், கலகலப்பாக மாறினர்.

நான் சொன்ன மாதிரி...
இது மட்டும் அல்ல... நான் சொன்ன மாதிரி பிரியாணி செஞ்சாச்சா அஜித் என்று கேட்டிருக்கிறார் ஷாலினி.

உங்க வீட்டுக்காரர் சூப்பராக பிரியாணி சமைக்கிறாரே. அந்த ரெசிபி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று ஷாலினியிடம் கேட்டதற்கு, எனக்கு அதெல்லாம் தெரியாது. அஜித் சமைத்துக் கொடுத்தால் நல்லா சாப்பிடுவேன் என்று தான் கூறி வந்துள்ளார். ஆனால், இன்று, நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டியான்னு, கலகலப்பாக பேசி உள்ளார்.

28 ஆண்டுகளாக... அமர்க்களம்
அஜித் குமாருக்கும், ஷாலினிக்கும் காதல் திருமணமாகி, சுமாராக 26 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆண்டுகள் போகப்போக இவர்களுக்கு இடையேயான காதலும் அதிகரிக்கிறது.

கார் பந்தயங்களுக்காக நாடு நாடாக சென்று கொண்டிருக்கும் அஜித் குமார், தற்போது ஓய்வில் இருக்கும்போது கால்பந்தாட்ட கிளப்புக்காக பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்தி உள்ளார்.

பிரியாணி பிரியர்
நடிகர் அஜித்துக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அவ்வப்போது, அவர் பிரியாணி சமைத்த வீடியோவை பார்க்கும்போது அது நன்றாகவே தெரிகிறது.

தற்போது, இந்த பிரியாணி சமைக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved