Also Watch
Read this

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

பாடல் ஆசிரியர் சிவகார்த்திகேயன்...
எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குநர் செல்வபாரதி, இயக்குநர் கே.பி.பி.நவீன் ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து சங்கத்தின் விழாவுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சிவகார்த்திகேயன் இந்த சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்ததோடு, எழுத்தாளர்கள் சமூகத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கான சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

சிறந்த பாடலாசிரியர்...
ஒரு நடிகராக மட்டுமின்றி, சிறந்த பாடலாசிரியராகவும் சிவகார்த்திகேயன் முத்திரை பதித்துள்ளார்.இதுவரை 11 திரைப்படப் பாடல்கள் மற்றும் ஒரு இசை ஆல்பம் ஆகியவற்றுக்கு பாடல்வரிகள் எழுதியுள்ளார்.
'கோலமாவு கோகிலா' படத்தின் "எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி"
‘டாக்டர்' படத்தின் "செல்லம்மா"
'பீஸ்ட்' படத்தின் "அரபிக் குத்து"
"காந்த கண்ணழகி", "சும்மா சுர்ருன்னு" போன்ற பல்வேறு சூப்பர்ஹிட் பாடல்கள் சிவ கார்த்திகேயன் எழுதியதாகும்.

இன்றும் குழந்தையின் உற்சாகம்
நடிகர் ரஜினிகாந்த் குறித்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறி இருப்பதாவது;
நாங்கள் அனைவரும் தலைவரின் மிகப்பெரிய ரசிகர்கள். அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள்.

தற்போது ‘தர்மன்’ படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினி சாரின் பணி நெறி மிகவும் தூய்மையானதும் அற்புதமானதுமாக இருக்கிறது. ஒரு குழந்தையின் உற்சாகத்தைப் பார்ப்பது போல இருக்கும். இன்றும் அதே அளவு எனர்ஜியுடன் இருக்கிறார்.
இவ்வாறு அஸ்வத் மாரிமுத்து கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved