news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

செல்பி எடுத்துக்கொண்ட ரசிகர்கள்

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு உயிர், உலக் என்ற மகன்கள் உள்ளனர். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடிக்கடி கோவில்களில் சாமி தரிசனம் செய்து வழக்கம்.

அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நயன்தாரா, விக்னேஷ் வருகை தந்தனர். ஏழுமலையான் கோவிலில் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் மனமுருகி வேண்டிக்கொண்டனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஆசீர்வாதம், சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினர்.

ரசிகர்களுடன் செல்ஃபி
LIK திரைப்படம் வெளியாவதையொட்டி அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவியும் பிரபல நடிகையுமான நயன்தாராவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். சிறப்பு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ரசிகர்களுடன் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளியாகிறது புதுப்படம்
‘LIK' படம் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என முதன் முதலில் கூறப்பட்டது.

அதன்பின், செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என வெளியீட்டு தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாகவில்லை. இதனிடையே 'LIK' வெளியாகிறது. இதனால், விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Related Link
மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர் - ரஜினி அறிவுறுத்தல்

மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர் - ரஜினி அறிவுறுத்தல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உதயநிதி நன்றாக வாழ வேண்டும் - இபிஎஸ் பேச்சு

8
19 mins agoshare
ஆயிரம்விளக்கில் இபிஎஸ் பிரச்சாரம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved