news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நடிகை அம்பிகா மீது நடிகை ராதா அதிர்ச்சி புகார்
tv

Also Watch

நடிகை அம்பிகா மீது நடிகை ராதா அதிர்ச்சி புகார்

செக் மோசடி செய்ததாக புகார் மனு

47

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகையும் சகோதரியுமான அம்பிகா மீது, நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். 46 கோடி ரூபாய் அளவில் செக் மோசடி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னணி நடிகைகள்...
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளாக ஒரு காலத்தில் வலம் வந்த புகழ் பெற்ற நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய சகோதரிகளுக்கு இடையே திடீர் மோதல் வெடித்து உள்ளது. நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் தனது சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், அவர்கள் இருவரும் சேர்ந்து சுமார் 46 கோடி ரூபாய் அளவிற்கு தன்னிடம் காசோலை மோசடி செய்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார் குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகாரின் பின்னணி என்ன?
சென்னையில், அம்பிகா, ராதா மற்றும் அவர்களது தாயார் சரசம்மா ஆகிய மூவரின் பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஏ.ஆர்.எஸ். கார்டன் என்ற பிரம்மாண்ட படப்பிடிப்பு தளம் உள்ளது. அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், இதனைத் திறந்து வைத்தார்.

தற்போது, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நடைபெறும் இந்த இடத்தை, எம்ஜிஆர் இலவசமாக வழங்கியதாக ஒரு தகவலும் கூறப்படுகிறது. இந்த சொத்து தான் தற்போதைய சர்ச்சையின் மையப் புள்ளியாக உருவெடுத்து உள்ளது.

ராதாவுக்கு மனக்கசப்பு...
இந்த ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்தில் சகோதரிகள் இருவருக்கும் அவர்களின் தாய்க்கும் சம பங்கு உள்ளது. தாய் மறைந்த நிலையில், அவரது பங்கு யாருக்கு சேர வேண்டும்? என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர் நிலத்தை விற்க முயன்ற நிலையில், "இந்த நிலம் விற்பனைக்கு அல்ல" என போட்டி போட்டு விளம்பர பலகை வைத்தனர். இதனால் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்த சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனை தற்போது காவல் நிலையம் வரை சென்று உள்ளது.

அக்கா, தங்கை உறவில் விரிசல்
1979ஆம் ஆண்டில் அறிமுகமான அம்பிகாவும், அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமான ராதாவும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கொடிகட்டிப் பறந்தனர்.

40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இணைபிரியாத சகோதரிகளாக வலம் வந்தவர்கள் இடையே, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை காரணமாக பகிரங்க மோதல் ஏற்பட்டு உள்ளது, சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved