Also Watch
Read this
பிரபல நடிகை சமந்தா, தனது கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்
அந்த பதிவில், ஒரு சிறிய மனிதனை உடலுக்குள் வளர்க்கும்போது நமது உடற்பயிற்சியின் நோக்கங்கள் மாறுவதாகவும், இந்த உடல் செய்த அதிசயங்களிலேயே மிக வலிமையான விஷயம் இதுதான் எனவும் தெரிவித்துள்ளார்.



மேலும், தனது பயிற்சிகளை பார்த்து யாரும் அப்படியே பின்பற்ற வேண்டாம் எனவும், உடற்பயிற்சி செய்வதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் எனவும் சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல் நாளிலேயே ரூ.60 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றபோதிலும், திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் அதிரடி திரைப்படம், யாஷின் கம்பீரமான நடிப்பு மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து, முதல் நாளிலேயே திரையரங்குகளை நிரம்பச் செய்து, 60 கோடி ரூபாய் வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved