news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விக்ரம் பிரபு 26ல் கதாநாயகியாக அறிமுகமாகும் அமலா ஷாஜி
tv

Also Watch

விக்ரம் பிரபு 26ல் கதாநாயகியாக அறிமுகமாகும் அமலா ஷாஜி

இன்ஸ்டா ரீல்ஸ் டூ வெள்ளித்திரை

14

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டிஜிட்டல் உலகம் இன்று எண்ணற்ற திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், ஸ்மார்ட்போன் திரைகளில் தினமும் தோன்றி, தனது நடனத்தாலும் எக்ஸ்பிரஷன்களாலும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த கேரளத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி, தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகியாக பிரம்மாண்டமான தன் முதல் அடியை எடுத்து வைக்கிறார்.

விக்ரம் பிரபு உடன்...
கும்கி படம் முதல் கதையின் தன்மையை உணர்ந்து திறம்பட நடிக்கும் முன்னணி நடிகர் விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படமான City of Goldல் தான் அமலா ஷாஜி கதாநாயகியாக களமிறங்குகிறார்.

வித்தியாசமான கதைக் களத்துடன் தயாராகப் போகும் இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தயாரிப்பில் உருவாகும் படம் என்பதால் ஆரம்பத்திலேயே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில்...
இப்படத்திற்கு மேலும் மிகப்பெரிய பலம் சேர்க்கும் வகையில், இசை அசுரன் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது வித்தியாசமான மெல்லிசையாலும், மாஸ் பின்னணி இசையாலும் இளைஞர்களை கட்டிப்போடும் யுவனின் இசை, இந்த படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் யுவனின் இசை படத்துக்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெள்ளித்திரையில்...
சமீபத்தில் வெளியான இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் விவரங்களும் இணையத்தில் மிகப்பெரிய ட்ரெண்டிங்காக மாறியுள்ளன. டிஜிட்டல் தளத்திலிருந்து வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் அமலா ஷாஜிக்கு, திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை மழையாக பொழிந்து வருகிறார்கள். ரீல்ஸ்களில் ரசிகர்களை மயக்கிய அமலா ஷாஜி, வெள்ளித்திரையில் எந்த மாதிரியான மாயாஜாலங்களை செய்யப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

Related Link
நடிகை ஷாலினி பாண்டேவின் போலி ஏ.ஐ. வீடியோ, கண்டனம்

நடிகை ஷாலினி பாண்டேவின் போலி ஏ.ஐ. வீடியோ, கண்டனம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved