news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்கள் போட்டியா?
tv

Also Watch

விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்கள் போட்டியா?

பெரம்பூர், திருச்சி கிழக்கில் குழப்பம்

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில், அவர் பெயரிலேயே சிலர் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், ஜோசப் பெயரில்...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் விஜய் என்ற பெயரிலேயே இரண்டு, மூன்று பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஜோசப் என்ற பெயரிலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த மார்ச் 30ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். சி.ஜோசப் விஜய் என்ற பெயரில், அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கே.விஜய் என்று ஒருவர் அனைத்து இந்திய ஜனநாயக மக்கள் கழகம் சார்பாகவும், ஜி.விஜய் என்று சுயட்சை வேட்பாளராக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இது மட்டுமின்றி, எம்.ஜோசப் மற்றும் எஸ்.ஜோசப் என்ற பெயரிலும் இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பூரில் அதிக வேட்பாளர்கள்
தலைநகர் சென்னையிலேயே அதிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த தொகுதியாக பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி உள்ளது. மொத்தமாக 66 பேர் வேட்புமனு தக்கல் செய்ததாக கூறப்படுகிறது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 56 வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் மொத்தமாக 628 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமாராக 7 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

பெரம்பூர் கோட்டை யாருக்கு?
பெரம்பூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருக்கிறது. இந்த நிலையில், பெரம்பூரில் தவெக சார்பில் விஜய் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்று அத்தொகுதியை தன்வசம் ஆக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக சார்பில் ஆர்.டி.சேகர், பாமக சார்பாக எம்.திலகபாமா, நாதக சார்பாக வெற்றி தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பெரம்பூர் தொகுதியில்
ஆண் வாக்காளர்கள் - 1,45,072
பெண் வாக்காளர்கள் - 1,50,696
மூன்றாம் பாலினத்தவர் - 92 பேர்
மொத்தம் - 2,95,860

திருச்சி கிழக்கு தொகுதியில் எத்தனை விஜய்?
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் கே.விஜய் என்ற சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

234 தொகுதிகளிலும்...
வேட்புமனு பரிசீலனையில் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது ஒரே பெயரில் எத்தனை பெயர் போட்டி? என்பது தெரிய வரும். மொத்தம் 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் பெயரின் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related Link
முதல்வர், துணை முதல்வர், இபிஎஸ், விஜய் வேட்புமனுக்கள் ஏற்பு

முதல்வர், துணை முதல்வர், இபிஎஸ், விஜய் வேட்புமனுக்கள் ஏற்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved