Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 07:50 AM
சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை One Battle After Another திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த இயக்குநர் உட்பட மொத்தமாக ஆறு விருதுகளை தட்டிச் சென்று, படக்குழு அசத்தி உள்ளது.
ஆஸ்கர் விருது...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை One Battle After Another திரைப்படம் வென்றது. இந்திய நேரடிப்படி, திங்கள்கிழமை, மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், 98ஆவது விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், 2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.
'One Battle After Another'
இந்த விழாவில், One Battle After Another திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகளைப் பெற்று, ஆஸ்கர் விருது விழாவில், திரைப்படக் குழுவினர் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் அள்ளினர்.
இதுதான் விருது...
* சிறந்த திரைப்படம் Best Picture - One Battle After Another
* சிறந்த இயக்குநர் Best Director - பால் தாமஸ் ஆண்டர்சன் - Paul Thomas Anderson - One Battle After Another
* சிறந்த தழுவல் திரைக்கதை Best Adapted Screenplay: பால் தாமஸ் ஆண்டர்சன் – One Battle After Another
* சிறந்த துணை நடிகர் Best Supporting Actor - சீன் பென் Sean Penn – One Battle After Another
* சிறந்த காஸ்டிங் Best Casting - முதல் முறையாக அறிமுகம் - கசாண்ட்ரா குலுகுண்டிஸ் Cassandra Kulukundis – One Battle After Another
* சிறந்த திரைப்படத் தொகுப்பு - வார்னர் பிரதர்ஸ் - ஆன்டி ஜர்கென்சென்
ஆக மொத்தம், ஆறு விருதுகளை, One Battle After Another குவித்து, பார்வையாளர்களை அசர வைத்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved