Also Watch
Read this
174 ஃபிளை துபாய் விமானப் பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார், ஒரு ஹீரோ என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

உயிரை பணயம் வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதை எண்ணி நாடே பெருமை கொள்வதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி இருப்பதாவது;
ஃபிளை துபாய் விமானப் பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. தனது உயிரை பணயம் வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் ஸ்மித்.

இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீர தீர செயலை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. துணை விமானியால் கத்திக்குத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஸ்மித் பூரண நலம்பெற வேண்டுகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved