Also Watch
Read this
ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் குலுங்க... குலுங்க...
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. இதனால் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18 புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபாரம்
ஏற்கனவே, சென்னை அணியுடன் நேருக்கு நேர் மோதி தோல்வியை தழுவிய மும்பை அணி, இம்முறையாவது வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மும்பை அணி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் ஜாக்ஸ் வெறும் ஒரு ரன்னில் அவுட் ஆகி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஒருபக்கம் ஏமாற்றம் இருப்பினும் மறுபுறம் ரையான் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார். ரையான் 37 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

ரன் சேர்க்க போராட்டம்
அவரை தொடர்ந்து நமன் தீர் 57 ரன்களில் அவுட் ஆக, மும்பை அணி ரன் சேர்க்க போராடியது. சூரியகுமார் யாதவ் 21 ரன்கள், திலக் வர்மா 5 ரன், ஹர்திக் 18 ரன் என, மும்பை அணி பேஸ்ட்மேன்கள் வலுவான ரன் சேர்க்க தவறினர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எளிய இலக்கில் சிஎஸ்கே
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. சிஎஸ்கே ஓப்பனிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் 11 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ருதுராஜ் நிதானமாக ஆடி வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். ருதுராஜ் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இறுதிவரை களத்தில் இருந்தார். ஊர்வில் படேல் 24 ரன்கள், கார்த்திக் சர்மா 54 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற செய்தனர்.

புள்ளி பட்டியலில் முன்னேற்றம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. மும்பை அணியை வீழ்த்தியதை தொடர்ந்து,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியது.