news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்
tv

Also Watch

தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்

சிவாஜி கணேசனுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் என முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டி உள்ளார்.

அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக நிலைத்திருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.


Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு


தமிழ் மண்ணின் பெருமையாக...
இதுகுறித்து, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால், நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு முதல்வர் விஜய் பதிவிட்டு உள்ளார்.

சிம்மக் குரலோனை நினைவில் ஏந்துவோம்
சிம்மக் குரலாலும், செழுந்தமிழ் உச்சரிப்பாலும், கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட செவாலியே சிவாஜி கணேசன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.
இதுதொடர்பாக, அவரது பதிவில் கூறி இருப்பதாவது;
சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாள். இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ் மண்ணின் பெருமை சிவாஜி கணேசன் என முதல்வர் விஜய் புகழாரம்

40
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved