Also Watch
Read this
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை அளிக்கும்போது யாரும் ஓடக் கூடாது என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
காவல்துறை மானியக்கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் நன்றாக தயாராகி, திங்கள்கிழமை பதிலுரை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாரும் ஓடக்கூடாது
அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை விளக்கமாக பதிலளிப்பேன். நான் பேரவையில் இல்லையென்றாலும் அனைத்து கேள்விகளும் எனக்கு வந்துவிடும். தெளிவான பதிலளிப்பேன்.

ஆனால், உங்கள் மூலம் ஒன்றை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நான் பேசும்போது யாரும் ஓடக் கூடாது என சத்தியம் செய்யுங்கள்," எனத் தெரிவித்தார்.

தயாராகி வாருங்கள்
இதனைத் தொடர்ந்து, பேரவையிலிருந்து முதல்வர் விஜய் புறப்பட்ட நிலையில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”கடைசியாக யார் ஓடிப் போனார்கள் என்று அனைவரும் பார்த்திருப்பார்கள். நேரலை செய்தீர்களா? எனத் தெரியவில்லை. நானும் 3 நாள்களில் தயாராகி வாருங்கள் என்றுதான் கூறினேன்,” என்று பேசினார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved