Also Watch
Read this
முதல்வர் விஜய் உரை
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது;

"ஒரு தவறு செய்தால்..."
2026 தேர்தலில் யாராலும் உடைக்க முடியாது என்று சொன்ன சாதி, மத அரசியலை உடைத்துள்ளோம். ‘ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்’ என்பதை செயலில் செய்ததாக நம்மை கூறுகின்றனர். முந்தைய ஆட்சியில் போடப்பட்ட ஓட்டைகளை அடைத்து கொண்டே மக்களுக்கான நலப் பணியும் செய்கிறோம்.

சினிமா TO அரசியல் Journey
நமது கட்சியை நடிகன் கட்சி என கூறி நக்கல் நையாண்டி செய்கிறார்கள்
படப்பிடிப்பில் இருந்து நேரடியாக இங்கு வந்ததை போல் இமேஜை கிரியேட் செய்கிறார்கள், அது ரீல்தான் ரியல் கிடையாது
சினிமா கேரியரில் நாம் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும்தான் காரணம்
1990-களிலேயே ரசிகர் மன்றம் தொடங்கி தொடர்ந்து மக்கள் பணியாற்றினோம்
2008-இல் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன்

விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல வழிகளில் மக்களுக்கு உதவியாக இருந்துள்ளோம்
கல்வி, வெள்ளம், கொரோனா, நூலகம் என பல திட்டங்களை தொடர்ந்து செய்து வந்தோம்
2021 உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளோம்
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.