news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரசவம் இலவசம், ஏமாந்த ஏழைத்தாய்
tv

Also Watch

பிரசவம் இலவசம், ஏமாந்த ஏழைத்தாய்

ரூ.6 லட்சத்திற்கு ஆண் குழந்தை சேல்ஸ்

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வறுமையின் பிடியில் உள்ள கர்ப்பிணிக்கு பிரசவம் இலவசம் என நேக்காக வலைவிரித்து, தனது குழந்தையை ஒரு தம்பதிக்கு ரூ.6 லட்சத்திற்கு விற்றுவிட்டதாக தாய் கொடுத்த புகாரின்பேரில் சென்னை கொளத்தூர் Skyline ஹெல்த்கேர், பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. வெறும் 3 மாதங்கள் மட்டும் கொடுத்தால் பிள்ளைச்செல்வம் இல்லாத ஏக்கத்தில் இருந்து ஒரு தம்பதி மீண்டு வருவார்கள் என தன் மூளையை கழுவியதாக தாய் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய தம்பதியும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

கணவர் உயிரிழந்ததால்...
செங்கல்பட்டு மாவட்டம், நரசன்குப்பம் உலகாத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவர்கள் கரிகாலன்-மேகலா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் மேகலா கர்ப்பமானார். ஆனால், பிப்ரவரி மாதம் ஒரு சாலை விபத்தில் கரிகாலன் உயிரிழந்தார்.

இதனால் வறுமையின் பிடியில் சிக்கிய மேகலாவின் கண்ணில் கொளத்தூர் Skyline ஹெல்த்கேர் என்ற மருத்துவமனையின் விளம்பரம் இன்ஸ்டாவில் தென்பட்டது. ஏழ்மை நிலையில் உள்ள தாய்க்கு, ’பிரசவம் இலவசம்’ என்ற விளம்பரத்தை பார்த்த அவர் நேரில் மருத்துவமனைக்கு சென்று 2ஆவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால், அதே வறுமையை பயன்படுத்தி மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தையையே நேக்காக பறிக்கும் என்பது மேகலாவிற்கு அப்போது தெரியவில்லை.

வாடகைக்கு குழந்தை?
இன்குபேட்டரில் வைத்து இருப்பதாகவும், நேரில் பார்த்தால் தொற்று ஏற்படும் எனவும் கூறி, குழந்தையை பார்க்க விடாமலேயே மேகலாவிடம் சிலமணிநேரம் பேசிய மருத்துவர்கள், திருவொற்றியூரை சேர்ந்த ஒரு தம்பதி குழந்தைக்காக தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாகவும், எவ்வளவோ முயன்றும் கரு உருவாகவில்லை எனவும் கூறியதோடு, உங்களின் இளைய மகனை அந்த தம்பதிக்கு 3 மாதங்கள் மட்டும் கொடுத்தால் சற்று ஆறுதலடைவார்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

குழந்தை இல்லாத வலியை ஒரு தாயாக புரிந்துகொண்ட மேகலாவும் விருப்பம் இல்லாவிட்டாலும் மனதை கல்லாக்கிக்கொண்டு மருத்துவர்கள் கூறியதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு, பிரசவமும் இலவசமாக பார்த்ததால் மருத்துவர்களிடம் மறுத்துப் பேசவும் முடியவில்லை.

ரூ.6 லட்சத்திற்கு விற்பனை
சொன்னபடியே, 3 மாதங்களுக்குப் பின்னர் Skyline ஹெல்த்கேர்க்கு வந்த மேகலா தனது குழந்தையை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போதுதான், அவரது தலையில் இடி இறங்குதுபோன்ற ஒரு தகவலே தெரியவந்துள்ளது. மேகலாவின் இளைய மகனை மருத்துவர்கள் திருவொற்றியூர் தம்பதிக்கு 6 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கொளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், Skyline ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம், மேகலாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் குழந்தையை வாங்கிய தம்பதி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையை கெல்லீஸ் காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.


காப்பகத்தில் குழந்தை
மருத்துவர்கள் மற்றும் குழந்தையை வாங்கியவர்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், பிறந்ததில் இருந்தே தாயின் முகம் பார்க்காத குழந்தை மேகலாவிடம் செல்ல மறுப்பதால், நீதிமன்றம் மூலமாக குழந்தையை யார் வளர்ப்பது என்பதுகுறித்து முடிவு செய்யப்படும். அதன்பின்னரே காப்பகத்தில் உள்ள குழந்தை நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்படைக்க வேண்டியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

பின்னணி குறித்து விசாரணை
இதுஒருபுறமிருக்க, Skyline ஹெல்த்கேர் இதற்கு முன்னதாக குழந்தைகளை விற்றுள்ளார்களா? அப்படி விற்பனை செய்திருந்தால் எத்தனை குழந்தைகளை விற்றுள்ளார்கள்?

அந்த குழந்தைகள் எங்கு உள்ளார்கள்? யாரிடம் இருக்கிறார்கள்? குழந்தை விற்பனைக்கு பின்னால் யார் யார் உள்ளனர்? என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

Related Link
அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்

அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசத்தும் Elevate Facelift

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved