news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்
tv

Also Watch

அசுரன் பட நடிகர் உயிரிழந்த வழக்கு, கொ*யை விபத்தாக மாற்றியது அம்பலம்

பவரை வைத்து GAME ஆடிய பெண் அதிகாரி

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அசுரன் பட நடிகர் சரண்ராஜ், விபத்தில் உயிரிழந்த வழக்கில் காவல்துறை பெண் உயர் அதிகாரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொடுத்த கடனை கேட்ட சரண்ராஜ் மீது காரை ஏற்றிய 3 பேரை காப்பாற்றுவதற்காக, கொ*யை விபத்தாக மாற்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், நேர்மையான அதிகாரியை வைத்து அடுத்தகட்ட விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதவி இயக்குநர்...
இயக்குநர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சரண்ராஜ். இவர் அசுரன், வடசென்னை, விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2023 ஜூன் 7ஆம் தேதி விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இரவுநேரத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதனை, கிண்டி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறை சாதாரண பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. ஆனால், தனது மகனின் மரணம் வெறும் விபத்து அல்ல, கலை இயக்குநர்களான பழனியப்பன், துரைராஜ் மற்றும் தமிழரசன் ஆகியோர் திட்டமிட்டு கொ* செய்துள்ளதாக குற்றம்சாட்டி சரண்ராஜின் தாயார் மாரியம்மாள் மனுதாக்கல் செய்தார்.

கடனை கேட்டதால்...
மேலும், கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் வேண்டுமென்றே காரால் மோதி படுகொ* நிகழ்த்தப்பட்டு உள்ளதாகவும், அதனை சம்பவம் நடந்த சிசிடிவி காட்சிகளே உறுதிபடுத்துவதாகவும் தனது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டது. சிசிடிவி காட்சியும் ஆய்வு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பழனியப்பன், துரைராஜ் மற்றும் தமிழரசன் ஆகிய 3 பேரும் சரண்ராஜிடம் குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கியதாகவும், நீண்ட நாட்களாகியும் திருப்பிக் கொடுக்காததால் பணத்தை தருமாறு சரண்ராஜ் அடிக்கடி கேட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் சரண்ராஜை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

திசை திருப்பிய பெண் காவல் அதிகாரி
இதன்படியே, பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞரை காரால் வேகமாக இடித்துத்தள்ளி பிளானை முடித்துள்ளனர். ஆனால், இவர்களை காப்பாற்றும் நோக்கில் புலனாய்வு செய்த காவல்துறை அதிகாரி அகிலா பிளேட்டையே தலைகீழாக மாற்றினார்.

விபத்தை ஏற்படுத்திய கார் மற்றொரு சைலோ காரின் மீது மோதி, அதன் பின்னரே சரண்ராஜின் பைக் மீது மோதியதுபோல் கற்பனை தகவலை முதல் தகவல் அறிக்கையிலும், குற்றப்பத்திரிகையிலும் குறிப்பிட்டு புலனாய்வு அதிகாரி அகிலா வழக்கையே திசை திருப்பி இருந்தார்.

துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை
ஆனால், சம்பவ இடத்தில் இருந்த முக்கியமான சிசிடிவி காட்சிகளையும், சாட்சியங்களையுமே சேகரிக்கவே இல்லை. நேர்மையை குழிதோண்டி புதைத்த அகிலா மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்ட சென்னை 16ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவருக்கு குறைந்தது 3 ஆண்டுகளுக்கு வழக்கு விசாரணை அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

மேலும், நேர்மையான ஒரு காவல் அதிகாரியை நியமித்து இவ்வழக்கில் தீவிர மேல்விசாரணை நடத்தி, 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் கூடுதல் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

Related Link
தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார், புகாரளித்த பெண்ணின் ஆடியோ

தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார், புகாரளித்த பெண்ணின் ஆடியோ "லீக்"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெற்றி மேடையில் இந்திய வீரர்கள், தமிழ்நாட்டுக்கு தனி இடம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved