news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார், புகாரளித்த பெண்ணின் ஆடியோ "லீக்"
tv

Also Watch

தவெக நிர்வாகி மீதான பாலியல் புகார், புகாரளித்த பெண்ணின் ஆடியோ "லீக்"

பணம் பறிக்கும் கும்பலின் சதி அம்பலம்

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராணிப்பேட்டை தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய்மோகன் மீதான பாலியல் புகார் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரளித்த பெண், அவரது கணவர் உள்ளிட்ட சிலருடன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ள நிலையில், பெண் உள்ளிட்ட சிலர் மீது மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரளித்த பெண்ணை பின்னால் இருந்து இயக்கியது யார்? குடும்பத்துடன் பெண் திடீர் தலைமறைவானது ஏன்?

பாலியல் புகார்...
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண், தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது பாலியல் புகாரளித்திருந்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் விஜய்மோகனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக அவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூலை 23ஆம் தேதி ஆற்காடு நகர காவல் நிலைய போலீசார் விஜய்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ
தவெக மாவட்டச் செயலாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளானது. சட்டமன்றம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் திமுக தலைவர்கள் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், புகாரளித்த பெண், அவரது கணவர் நவீன் உள்ளிட்ட சிலருடன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளன. அதில், விஜய்மோகன் மீது புகாரளித்து பணம் பெறுவது தொடர்பாக அப்பெண் பேசுவது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் மீது வழக்குப்பதிவு
தவெகவில் உள்ள நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர், பின்னால் இருந்து இயக்கியதும், பின்னாளில் அவர்கள் பின்வாங்கியதும் புகாரளித்த பெண்ணின் உரையாடல்கள் மூலம் தெரிய வருகிறது. இதற்கிடையே, விஜயமோகன் மீது புகாரளித்த பெண், அவரது கணவர் நவீன் உள்ளிட்ட சிலர் மீது, மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை விசாரணை
பணம் கேட்கப்பட்டதா, பணப் பரிமாற்றம் நடந்ததா, ஆடியோவில் இடம்பெறும் தகவல்கள் உண்மையா? அப்பெண்ணை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், வெளியாகியுள்ள ஆடியோ பதிவுகள் உண்மையானவையா? அவை எந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்டன என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் வட்டாரத்தில்...
இந்த நிலையில் புகாரளித்த பெண், அவரது கணவர் நவீன் ஆகியோர் தலைமறைவானதாகவும், அவர்களை கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒருபுறம் விஜய்மோகன் மீதான பாலியல் புகார் விசாரணை, மறுபுறம் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் புதிய வழக்கு என, இந்த விவகாரம் ராணிப்பேட்டை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளதுடன், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
ஜனநாயகத்தின் 4ஆம் தூண் மீது தாக்குதல், தவெக எம்.எல்.ஏ. கபில் அடாவடி

ஜனநாயகத்தின் 4ஆம் தூண் மீது தாக்குதல், தவெக எம்.எல்.ஏ. கபில் அடாவடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்த ’மண்டாடி’

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved