Also Watch
Read this
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள், அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர், ராமநாதசாமி கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின்பு சாமி தரிசனம் செய்தனர்.

தெற்கே அமைந்துள்ள...
ராமேஸ்வரம், துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகிய நான்கு புண்ணிய திருத்தலங்களில் ராமேஸ்வரம் மட்டும் தெற்கே அமைந்துள்ள சிவஸ்தலம். மற்றவை வடக்கே அமைந்துள்ள திருத்தலங்கள். 12 ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும் தெற்கே ராமேஸ்வரமும் அமைந்துள்ளன. இந்த புனித திருத்தலம் காசிக்கு நிகரான புண்ணிய திருத்தலம். அவதார புருஷரான ராமர், ஈஸ்வரனை வழிபட்டதாலேயே இந்த திருத்தலத்திற்கு ராமேஸ்வரம் என பெயர் வரக் காரணம் ஆயிற்று.

இந்துக்களின் நம்பிக்கை
பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மட்டும் விடுமுறை காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. வருடத்தில் 12 அமாவாசை தினங்கள் வந்தாலும், அனைத்து அமாவாசை தினங்களிலும் திதி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் , ஆடி, தை, புரட்டாசி அமாவாசை காலங்களில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை
இன்று, ஆகஸ்ட் 12ஆம் தேதி, ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி , தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து, ராமநாதசாமி கோவிலுக்கு அருகே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களின் நீராடி, ராமநாதசாமி மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை நீண்ட நேரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

அடிப்படை வசதிகள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வருகை தந்துள்ள பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகமும், அதேபோல பக்தர்களின் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர காவல் குழும போலீசார் படகுகள் மூலம் கடலில் நீராடும் பக்தர்களை கண்காணித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved