Also Watch
Read this
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழ்நாடு பாதிக்ககூடாது
தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி பேசியதாவது;
தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. தொகுதி மறுவரைறையின் பாதிப்பை முதலில், இந்தியாவுக்கே கூறியவர் அன்றைய முதல்வர் ஸ்டாலின்.

தமிழகம் பாதிக்கக் கூடாது என திமுக ஆட்சியிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏழு மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார் ஸ்டாலின். ஏப்ரல் 16ல் மசோதா எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது மசோதா நகலை எரித்து, எதிர்ப்பைக் காட்டினோம்.

காரணம் திமுக தான்
நாடாளுமன்றத்தில், இந்த மசோதா தோற்கடிக்கப்படக் காரணம் திமுக தான். தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க மாட்டோம். எனவே, தொகுதி மறுவரையறையை எதிர்த்து அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஆதரிக்கிறோம். தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு
33% மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக முழுமையாக வரவேற்கிறது, ஆதரிக்கிறது. 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் 7.18 என்ற சதவிதத்தை குறைக்க அனுமதிக்கக் கூடாது. அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved