Also Watch
Read this
By: Manigandan Raja

பனாமா நாட்டு கொடியுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்
ஈரானில் பனாமா நாட்டு கொடியுடன் சென்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் துறைமுகங்களை அமெரிக்க முற்றுகையிட்டுள்ள நிலையில், ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவத்தின் தொடர் எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஈரான் துறைமுகத்தை நோக்கி செல்ல முயன்றதால் "வேலா நோவா" என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கப்பலின் சுக்கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் அந்த தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பலூசிஸ்தான்
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பலூசிஸ்தான் மக்கள் தங்களது முதலாவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திரத்தை கொண்டாடும் நிலையில், 3 நாட்களுக்கு முன்னதாக கொண்டாடி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

மேலும், பலூசிஸ்தான் குடியரசை சட்டப்பூர்வ தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என பலூசிஸ்தான் குடியரசு தலைவர் மிரர்யார் பலூச் சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பலூசிஸ்தான் தனிநாடு தொடர்பான வரைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved