Also Watch
Read this
By: Manigandan Raja

வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காங்கோ
காங்கோவில் எபோலா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து தாண்டியுள்ளது. மே மாதம் தொடங்கிய எபோலா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ நாட்டின் சுகாதாரத்துறை திணறி வருகிறது. இந்த நிலையில், எபோலாவுக்கு இதுவரை 2 ஆயிரத்து 11 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த முறை அதிவேகமாக பரவி வரும் தொற்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது தவிர, தற்போதைய அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி, 4 ஆயிரத்து 381 பேருக்கு எபோலா தொற்று உள்ளது.
கொலம்பியா நிலநடுக்க பலி 240 ஆக அதிகரிப்பு
கொலம்பியாயாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது.

இந்த நிலநடுக்கத்தால் கொலம்பியாவில் மேற்கு பகுதியில் உள்ள பெரைரா, கிப்டோ, காலி, மனிசல்ஸ் ஆகிய நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்து உள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா அவசர கால நிவாரணமாக 150 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved