news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இடைத்தேர்தலில் இறங்கி அடிக்கும் திமுக? சூறாவளியாக சுழலும் இளைஞரணி
tv

Also Watch

இடைத்தேர்தலில் இறங்கி அடிக்கும் திமுக? சூறாவளியாக சுழலும் இளைஞரணி

மாண்புமிகுக்களை படையிறக்கிய தவெக

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக, திமுக, அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் போக்கையே தீர்மானிக்கும் தேர்தலாக கருதப்படுவதால், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மூன்று கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திண்ணை பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கும் திமுக, இரு தொகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகளை அதிகளவில் களமிறக்கியிருக்கும் நிலையில், தவெகவோ பூத் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் கண்காணிப்பில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

தவெக vs திமுக vs அதிமுக
தனிப்பெரும்பான்மைக்கு பலம் சேர்ப்பதை தாண்டி, தனது செல்வாக்கு கொஞ்சமும் குறையவில்லை என்பதை நிரூபிக்க தவெகவும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுகவும் முனைப்பு காட்டி வருவதால், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தவெக ஆட்சி அமைந்து 4 மாதங்களை கடந்த போதும் விஜய் அலையின் வீரியம் இன்னும் முற்றிலுமாக குறைந்ததாக தெரியவில்லை. அதனால் இடைத்தேர்தலில் மைக்ரோ லெவலில் ஸ்கெட்ச் போட்டு, சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற டார்க்கெட்டுடன் நுணுக்கமான வியூகங்களை வகுத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருகிறது திமுக.

திமுக இளைஞரணி
முதலில் இடைத்தேர்தலை திமுக புறக்கணிப்பது என்ற முடிவை உதயநிதி தான் பிடிவாதமாய் மறுத்ததாகவும், 2 தொகுதிகளையும் வென்று கொடுக்க வேண்டியது தனது பொறுப்பு என உத்தரவாதம் கொடுத்ததாகவும் கூறப்பட்ட நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது 2 தொகுதிகளிலும் சுமார் 7,500 பேர் என திமுகவின் இளைஞரணி நிர்வாகிகளே அதிகளவில் களமிறங்கியுள்ளனர்.

பொறுப்பாளர்கள் நியமனம்
ஒரு வீட்டை கூட விட்டு விடக் கூடாது என்ற நோக்குடன் திண்ணை பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ள திமுக, தேர்தல் பணிகளை கண்காணிக்க பாகம் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. ஒரு பொறுப்பாளருக்கு குறைந்தது 10 பாகங்கள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு தலா 21 பேர் என்ற விகிதத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கையில் சூட்கேஸ் உடன்...
திமுக இளைஞரணியில் இருந்து மதுராந்தகத்திற்கு 40 மாவட்ட அமைப்பாளர்களும், தாராபுரத்திற்கு 36 மாவட்ட அமைப்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட அமைப்பாளருக்கும் கீழ் 25 நிர்வாகிகள் என திமுக இளைஞரணியின் பெரும்படை இடைத்தேர்தல் களத்தில் குவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நிர்வாகிகள் குவிப்பு ஒரு புறமிருக்க, பிரச்சார உத்திகளையும் திமுக மிகுந்த கவனத்துடன் வடிவமைத்திருப்பதாக கூறப்படுகிறது. குதிரை பேரம் காரணமாகவே இடைத்தேர்தல் வந்திருப்பதாக குறிப்பிடும் வகையில் ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் கையில் சூட்கேசுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக பிரச்சாரத்தில்...
மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மகளிருக்கு 2,500 ரூபாய் வழங்கப்படாதது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்றவற்றை மையப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களையும் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

எச்சரிக்கையுடன் தவெக...
இரண்டு தொகுதிகளில் ஒன்று சறுக்கினால் கூட தவெக ஆட்சி மீதான மக்கள் செல்வாக்கு நீர்த்து போவதோடு, முதலமைச்சர் விஜயின் இமேஜுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தவெகவும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பூத் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ள தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களையும் களத்தில் இறக்கி விட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பூத் விவரங்களைத் தெரிந்து கொண்டு, உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணியை தீவிரப்படுத்துமாறு கட்டளையிட்டிருக்கிறார். வீடு வீடாக, வீதி வீதியாக செல்வதை விட, வாட்ஸ்அப் குழுக்கள், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளம் என டிஜிட்டல் தளங்களிலும் தவெகவினர் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதிமுகவும் களத்தில்...
இதனிடையே, அதிமுக சார்பில் பெற்ற வெற்றியை உதறிவிட்டு தவெகவில் இணைந்து தேர்தலை சந்திக்கும் இரண்டு தொகுதி வேட்பாளர்களுக்கும் பாடம் கற்பிக்கும் நோக்கில் அதிமுகவினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் வித விதமாக வியூகங்களை வகுத்து, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் இடைத்தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எனக்கும் சாந்திக்கும் தொடர்பா? கடுப்பாகி உண்மையை உடைத்த ஜான் பாண்டியன்

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved