Also Watch
Read this
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3,040 ரூபாய் அதிகரித்து உள்ளது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-27
சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 13,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-28
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-30
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-31
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல் 01 இன்று
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3,040 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
27 மார்ச் - ரூ.1,07,440
28 மார்ச் - ரூ.1,09,280
30 மார்ச் - ரூ.1,08,800 காலை
30 மார்ச் - ரூ.1,10,160 பிற்பகல்
31 மார்ச் - ரூ.1,09,360
01 ஏப்ரல் - ரூ.1,12,400 இன்று காலை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved