Also Watch
Read this
சென்னையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தைகள், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
ஏப்ரல்-03
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,850 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-04
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-06
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ரூ.1,10,480க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் 140 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-07
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 130 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-08
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை தொடங்கியதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2,500 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 750 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
03 ஏப்ரல் - ரூ.1,10,800
04 ஏப்ரல் - ரூ.1,11,600
06 ஏப்ரல் - ரூ.1,10,480 காலை
06 ஏப்ரல் - ரூ.1,11,920 பிற்பகல்
07 ஏப்ரல் - ரூ.1,10,880
08 ஏப்ரல் - ரூ.1,13,600 இன்று காலை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved