Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 12:32 PM
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச குளிர்சாதன பெட்டி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை, அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பதாவது;
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ் Refrigerator வழங்கப்படும்
* நகரப் பேருந்துகளில் ஆண்களும் இலவசமாக பயணம் செய்யலாம்
* மகளிருக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும்
* பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியமாக வழங்கப்படும்
* குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் வழங்கப்படும்
* பொது மக்களின் விலைவாசி சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகை ரூ.10,000 வழங்கப்படும்.
* பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000
* முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000
* வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000
* பிளஸ்-2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை
* வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி
* மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக அதிகரிப்பு
* கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்வு
* விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக அதிகரிப்பு
* நடைபாதை சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி
* வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம்
* ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் நிவாரண தொகை
* இஸ்லாமியர், கிறிஸ்தவர், ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன்
* மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், மொத்தம் 297 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved