news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "அதிமுகவுக்காக எந்த தியாகத்துக்கும் இபிஎஸ் தயார்"
tv

Also Watch

"அதிமுகவுக்காக எந்த தியாகத்துக்கும் இபிஎஸ் தயார்"

சி.வி.சண்முகத்தை பேச வருமாறும் அழைப்பு

25

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மேலும் 15 பேர், தவெகவுக்கு வர இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசிய விவகாரம் குறித்தும், தவெகவினர் வெளிப்படையாக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து அதிமுக புகார் அளித்துள்ளது.

அதிமுகவைக் காக்க எந்தத் தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக கூறி உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
தலைமை குறித்து ஏதாவது மாற்று கருத்து இருக்குமானால், இபிஎஸ்-ஐ சி.வி.சண்முகம் நேரடியாக சந்தித்து தெரிவிக்கவும் அழைப்பு விடுத்தார்.

ஆளுநரிடம் அதிமுக புகார் மனு
இதுகுறித்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது;
ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களை, குதிரை பேரம் மூலம் வாங்கி, அவர்களை தவெக ராஜினாமா செய்ய வைத்துள்ளது.

இதன்மூலம் இடைத்தேர்தலைக் கொண்டு வந்து அவர்களை மீண்டும் போட்டியிட வைத்து, தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது.

செங்கோட்டையன் பேச்சு
தற்போது, தவெகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன், மேலும் 15 பேர் தவெக வரவுள்ளதாக மேடையில் பேசியுள்ளார். அப்படியென்றால், தமிழ்நாட்டில் தொடர்ந்து குதிரை பேரம் நடைபெறுகிறது. அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சான்றாக உள்ளது. குதிரை பேரம் நடத்தும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

ஆறு எம்.எல்.ஏ.க்கள்...
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர்.

இந்த நிலையில், அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வரத் தயாராக இருப்பதாக தவெக அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையானது.

இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகரை நேரில் சந்தித்த அதிமுக பிரதிநிதிகள், அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக புகார் அளித்தனர்.

Related Link
WHAT NEXT? வீராப்பில் வேலுமணி தரப்பு? 
புதிய கட்சியா? அதிமுகவை மீட்க ஆப்ஷனா?

WHAT NEXT? வீராப்பில் வேலுமணி தரப்பு? புதிய கட்சியா? அதிமுகவை மீட்க ஆப்ஷனா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"SIR ஆல்தான் ஸ்டாலின் தோல்வி" என திருமாவளவன் பரபரப்பு பேச்சு

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved