news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பல கோடி 'மெத்' போதைப்பொருள் சாம்ராஜ்யம் விசாரணை வளையத்தில் முன்னாள் தவெக நிர்வாகி
tv

Also Watch

பல கோடி 'மெத்' போதைப்பொருள் சாம்ராஜ்யம் விசாரணை வளையத்தில் முன்னாள் தவெக நிர்வாகி

நேபாளம் TO இலங்கை TO ஐரோப்பா, நீளும் சதி வலை

46

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக கடற்கரையை அதிர வைத்துள்ள, மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில், நேபாளம் மற்றும் வட மாநிலங்கள் வழியாக பெங்களூரு கொண்டு வரப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட லேத் பட்டறைகளில் மெத்தபெட்டமைன் தயாரிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் எப்படி தயாரிக்கப்பட்டது? அதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இந்த சாம்ராஜ்யத்தின் தலைவனான அந்த முன்னாள் தவெக நிர்வாகி யார்?

ராமநாதபுரத்தில் இருந்து...
ராமநாதபுரத்தில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சிக்கிய ஒருவரால் ஒரு சர்வதேச கும்பலின் மொத்த கைவரிசையும் அம்பலமாகி உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு போதைப்பொருளுடன் சிக்கியவரிடம் உள்ளூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மெத்தபெட்டமைன் போதை பொருளை, வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகன் மற்றும் , வேளாங்கண்ணி அருகே உள்ள கீழப்பிடாகையைச் சேர்ந்த நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பூபாலன் ஆகியோரிடம் இருந்து வாங்கியதை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்த தகவல்களை மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு பகிர்ந்து கொண்ட தமிழக காவல்துறை ரகசியமாக சுகன் மற்றும் பூபாலனை கண்காணித்து வந்தனர்.

இதில், இவர்களுடன் வேளாங்கண்ணி காந்தி செட்டி தெருவை சேர்ந்த மணிகண்டன், பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சுகனின் மற்றொரு நண்பர் சதீஷ் ஆகியோரும் மெத்தபெட்டமைன் உற்பத்தி, விற்பனை, கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர்.

அதிகாரிகள் குழு...
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக இணை இயக்குனர் கனகசுப்பிரமணியன், நாகை சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் சசிசேகர், ஆனந்த், தீபக் ஆகியோர் தலைமையிலான 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் நடுத்தெருவில் உள்ள சுகனின் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு நடத்திய சோதனையில், தலா 5 கிலோ எடையுடன் 27 பாக்கெட்டுகளில் இருந்த 135 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது.

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 135 கோடி ரூபாய் என்ற நிலையில், சுகனை மடக்கி அதிகாரிகள் விசாரித்ததில், பூபாலனே போதைப்பொருள் கும்பலுக்கு தலைமை தாங்கியது தெரியவந்தது.

அடுத்தடுத்து கைது
இதையடுத்து பூபாலன், மணிகண்டன், சதீஷ் ஆகியோரையும் அடுத்தடுத்து கைது செய்து தனிதனியாகவும் விசாரணை நடத்தினர். அப்போது இந்த கும்பல் பல ஆண்டுகளாக மெத்தம் பெட்டமைனை உள்ளூரிலும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அங்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி பூபாலன் இலங்கை மூலமாக பல்வேறு நாடுகளுக்கும் மெத்தம் பெட்டமனை கடத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

கிலோ கணக்கில் உற்பத்தி
நேபாளம் வழியாக வட மாநிலங்களுக்கு கொண்டுவரப்படும் மூலப்பொருட்கள், பெங்களூருவை சேர்ந்த ஒரு கும்பல் மூலமாக தமிழகத்திற்கு கடத்தப்பட்டுள்ளன.

பெங்களூரு ஆசாமிகளிடம் போதைப்பொருள் தயாரிக்கும் ஆபத்தான வழிமுறைகளை கற்று கொண்ட தமிழக கடத்தல்காரர்கள், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை, பாம்பன், சிவகங்கை போன்ற பகுதிகளில் உள்ள ரகசிய பட்டறைகளில் வைத்து கிலோ கணக்கில் மெத்தம் பெட்டமைனை தயாரித்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

9 பேர் கைதான நிலையில்...
கடந்த ஜூலை மாதமே ராமநாதபுரத்தில் லேத் பட்டறையில் போதை பொருள் தயாரித்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே கும்பல் தயாரித்த போதைப்பொருள் தான் தற்போது நாகைக்கும் கொண்டுவரப்பட்டு பதுக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

நாகையில் பிடிபட்ட மெத்தம் பெட்டமைன் போதைப்பொருளை, மன்னார் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, மண்டபம், வேதாளை, தொண்டி, தூத்துக்குடி போன்ற கடலோர பகுதிகள் வழியாக இலங்கையின் கல்பிட்டி, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இது சப்ளை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட பூபாலன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முடிக்கப்பட்டு, வேதாரண்யம் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பூபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை கட்சியில் இருந்தே நீக்குவதாக த.வெ.க. அறிவித்துள்ளது.

போலீசாருக்கு தொடர்பு?
தவெக நிர்வாகி பூபாலனின் செல்போனை ஆய்வு செய்ததில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் உள்ள 3 போலீசாரின் செல்போன் எண்களில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் போதை பொருள் கடத்தலில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என சுங்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து 3 போலீசாரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர் போதை பொருள் கடத்தலுக்காக கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கி இருந்தார் என்றும், அவர் கோடியக்கரையில் ஒரு மீனவரிடம் 50,000 ரூபாய் கொடுத்து படகையும், காரைக்காலில் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிவேக இன்ஜினையும் வாங்கிச்சென்றதாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தெரிவித்துள்ளனர்.

நடிகர், நடிகைக்கு சப்ளை?
இந்த தகவல்களின் அடிப்படையில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் யார்? என்றும் விசாரணை நடந்து வருகிறது. கனடா ஆசாமி மூலமாக பூபாலன் கும்பல் சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது

கைதான போதை பொருள் கும்பலுக்கு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளுடன் தொடர்பு உள்ளதா? அவர்களுக்கு உயர் ரக போதை பொருளை இந்த கும்பல் சப்ளை செய்ததா? என்றும் வருவாய் குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

Related Link

"போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு" என மு.க.ஸ்டாலின் கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved