news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திரைக்கலைஞர் நானா படேகர் மறைவு, திரையுலகம் இரங்கல்
tv

Also Watch

திரைக்கலைஞர் நானா படேகர் மறைவு, திரையுலகம் இரங்கல்

தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திரைக்கலைஞர் நானா படேகர் மறைவு, திரையுலகம் இரங்கல்

புகழ்பெற்ற திரைப்பட நடிகர் நானா படேகர் கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. பொம்மலாட்டம், காலா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயங்கிய நிலையில்...
கோவாவின், டோனா பவுலா பகுதியில் அமைந்திருந்த தனது இல்லத்தில் நடிகர் நானா படேகர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்டவர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்குத் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளித்து, மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்த போதிலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 5:20 மணியளவில் நானாபடேகர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பல தசாப்தங்களாக...
இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். 'பரிந்தா, கிராந்திவீர், அப் தக் சப்பன்ஹீ, பிரஹார், அங்கார், வெல்கம்,' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவரது நடிப்பு கொண்டாடப்படுகிறது.

தமிழிலும் கவர்ந்தார்
தமிழில் இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்திலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். இந்த இரண்டு படங்களாலும் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

தேசிய விருதாளர்
மூன்று தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ள நானா படேகருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது. இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுமை மிக்க நடிகர்
நானா படேகர் Nana Patekar என்று அழைக்கப்படும் விசுவநாத் படேகர் Vishwanath Patekar 1951ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தார். நடிகரும், திரைக்கதை ஆசிரியரும், முன்னாள் இந்திய பிராந்திய ராணுவ அதிகாரியுமாக அறியப்படுகிறார். முக்கியமாக இந்தி மற்றும் மராத்தித் திரைப்படங்களில் சிறந்த ஆளுமை கொண்டிருந்தார்.

ராணுவத்தில்...
1990ல் இந்திய பிராந்திய ராணுவத்தில் கௌரவத் தளபதியாக நியமிக்கப்பட்டார், பிரஹார் படத்திற்காக மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு, அந்த நேரத்தில் கர்னல் பதவியில் இருந்த ராணுவ ஜெனரல் வி.கே.சிங் உடன் பணியாற்றினார். 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது, படேகர் மராட்டிய லைட் காலாட்படை படைப்பிரிவில் கெளரவ மேஜராகவும் தனது சேவைகளை வழங்கினார்.

விவசாயிகளுக்காக அறக்கட்டளை
செப்டம்பர் 2015ல், படேகர் சக மராத்தி நடிகர் மகரந்த் அனஸ்புரேவுடன் இணைந்து நாம் அறக்கட்டளையை நிறுவினார்.

இது மகாராட்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக செயல்படுகிறது.

Related Link
ரசிகர்கள் மத்தியில் என்ன பேசினார் சிவகார்த்திகேயன் வெளியானது வீடியோ

ரசிகர்கள் மத்தியில் என்ன பேசினார் சிவகார்த்திகேயன் வெளியானது வீடியோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

TVK கொடியை பயன்படுத்தி பாலியல் அத்துமீறல்? கைது

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved