news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி
tv

Also Watch

tv

Read this

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றி

ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணியை 23 ரன் வித்யாசத்தில் வீழ்த்தியது.

சென்னை அணி 20 ஓவருக்கு 212/2 ரன்கள் சேர்ப்பு
மூன்று தொடர் தோல்விக்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவருக்கு 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவருக்கு 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதம்
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் பதிவு செய்தார். 52 பந்துகளில் 14 ஃபோர்கள், 3 சிக்சர்கள் என 102 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணிக்காகவும் தனது முதல் சதத்தை பதிவுசெய்தார்.
பின்னர், 56 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்ற சென்னை வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு
சென்னை வீரர் ஜேமி ஓவர்டனின் அசாத்தியமான பந்துவீச்சை பார்த்து சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டிய காட்சி, இணையத்தில் வைரலாகி உள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜேமி ஓவர்டன், சென்னை அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.

தோனியை மிஸ் செய்வதாக இன்ஸ்டாவில் பதிவு
தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை-டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியினை கண்டு ரசித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாம்சன் செஞ்சுரியை பார்த்தாலும், தன்னுடைய ஃபேவரெட் தோனியை மிஸ் பண்ற ஃபீலிங்கை avoid பண்ண முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள்
ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ - குஜராத் அணிகள் மோத உள்ளன. இதனைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் மும்பை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

Related Link
3 ஓவர்கள் மட்டும் வீசி 9 விக்கெட்டுளை கைப்பற்றி அசத்தல்

3 ஓவர்கள் மட்டும் வீசி 9 விக்கெட்டுளை கைப்பற்றி அசத்தல்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்

2
16 mins agoshare
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved