news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல்முறையாக பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து பதிவிட்டார் அண்ணாமலை
tv

Also Watch

முதல்முறையாக பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து பதிவிட்டார் அண்ணாமலை

பிரதமர் மோடிக்கும் பிறந்த நாள் வாழ்த்து

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதல்முறையாக பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை பதிவிட்டார் அண்ணாமலை. தமிழகத்தின் நலனுக்காக உழைத்த தலைமகனுக்கு புகழாஞ்சலி என கூறி உள்ளார்.

பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது படத்துடன் கூடிய வாழ்த்துக்களை, ’வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பதிவிட்டு இருப்பதாவது;
சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து
அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது தேசத்திற்கான அவரது அயராத சேவை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, மற்றும் நமது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதற்கான அவரது தளராத உந்துதல் ஆகியவை கோடிக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறோம்,’ என்று கூறி உள்ளார்.

அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து
கடந்த 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, அண்ணாமலை வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம் இன்று. மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர். எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர். தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாதுரை நினைவைப் போற்றி வணங்குகிறோம்.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Related Link

"பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்" என முதல்வர் விஜய் பதிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவுடனான மோதலை தொடருவதில் விருப்பமில்லை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved