ரஷ்யாவில் மைனஸ் 50 டிகிரியில் உறைய வைக்கும் கடும் குளிரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. கடும் குளிரை தாங்கும் வகையில் உடைகளை அணிந்திருந்த போட்டியாளர்கள், துணிச்சலுடன் போட்டியில் பங்கேற்று இலக்கை அடைந்தனர். அதிகாலை நேரத்தில் போட்டி நடைபெற்ற நிலையில், அவர்கள் ஓடிய பாதை முழுவதும் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தது.