சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வாரத்தில் முதல் நாளில்... வாரத்தின் முதல் நாளான இன்று பிப்ரவரி 23ஆம் தேதி, தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ரூ.14,860க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தில்... கடந்த வாரத்தில், தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. தற்போது வாரத்தின் தொடக்கத்திலேயே அவற்றின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்... 17.02.2026 - ரூ.1,14,56018.02.2026 - ரூ.1,13,840 19.02.2026 - ரூ.1,16,00020.02.2026 - ரூ.1,15,36021.02.2026 - ரூ.1,17,44023.02.2026 - ரூ.1,18,880 Related Link ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,440