Also Watch
Read this

வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 11 சீரிஸ்-ஐ அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே அறிமுகமான ஒரே வாரத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்ஸல் 11- 6.3 இன்ச் OLED டிஸ்பிளேவும், பிக்ஸல் 11 ப்ரோ 6.8 இன்ச் OLED-யும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. Gemini AI தவிர Agentic AI செயல்திறனும் இதில் இடம்பெறலாம் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வருகிறது அடுத்த Fold Model
தனது அடுத்த தயாரிப்பான Galaxy Z Fold 8 Ultra ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 22ஆம் தேதி, சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. Galaxy Z Fold 8 Ultra 7.6-இன்ச் டிஸ்ப்ளே, 4:3 aspect ratio, 5.5-இன்ச் கவர் ஸ்கிரீன், AMOLED டிஸ்ப்ளே உடன், வெறும் 201 கிராம் எடையில், 4.5 மில்லி மீட்டரில் இந்த செல்ஃபோன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூடவே 5,000 mAh பேட்டரி, Snapdragon 8 Elite Gen 5 சிப் பொருத்தப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகமானது டெக்டன்
நிசானின் டெக்டன் ரக கார் 2 டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் ரூ.10.49 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. SUV தோற்றத்தில் 11 வண்ணங்களில் வரும் இந்த டெக்டன் ரக காரின் மற்ற மாடல்களும் வெவ்வேறு விலைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.10.49 லட்சம், அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் NCAP அமைப்பிடம் பைவ் ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று உள்ள இந்த காரில் 6 ஏர்பேக் மற்றும் லெவல்-2 ADAS போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவை கலக்கும் AeroxE
Yamaha நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான AeroxE-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 9.4 kW பவர் மற்றும் 48 Nm டார்க், இரண்டு 1.5 kWh ரிமூவபிள் பேட்டரி பேக், TFT டிஸ்பிளே, Keyless Ignition உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய இந்த ஸ்கூட்டர் ரூ.2.82 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
ஜப்பானின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா (Yamaha), தனது புகழ்பெற்ற மேக்ஸி-ஸ்கூட்டர் மாடலான ஏராக்ஸின் எலெக்ட்ரிக் பதிப்பான யமஹா ஏராக்ஸ்-இ (Yamaha Aerox-E) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு பேட்டரியை முழுமையாக ரீ-சார்ஜ் செய்ய 3 மணி நேரம் 10 நிமிடங்களும், இரண்டு பேட்டரிகளையும் ரீ-சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 20 நிமிடங்களும் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

விடைபெறுகிறது Yamaha R6
தங்களது மிகவும் பிரபலமான R6 ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பை உலகம் முழுவதும் நிறுத்துவதாக Yamaha நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த முடிவை யமஹா எடுத்துள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த 600cc இன்லைன்-ஃபோர் (Inline-Four) செக்மென்ட் பைக், வாகனப் பிரியர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் மாடலாக இருந்தது. கடுமையான சர்வதேச உமிழ்வு விதிகளால் (Euro 5), இதன் சாலையில் ஓட்டும் பதிப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால், ரேஸ் டிராக்குகளுக்காக மட்டும் 'R6 ரேஸ் பேஸ் மாடல்' (R6 Race Base Model) என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த டிராக்கிற்கான தயாரிப்பும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் பதிப்பை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி 2027 முதல் பைக் டெலிவரி செய்யப்படுகிறது. அதன் பிறகு யமஹா ஆர்6 உலகளவில் நிரந்தரமாக ஓய்வு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.