Also Watch
Read this
By: Manigandan Raja

மொட்டையடித்து புகைப்படங்கள் வைரல்
பெங்களூரு பிசிசிஐ மைதானத்தில் நடைபெற்ற மத்திய மண்டலம்-கிழக்கு மண்டல அணிகளுக்கு இடையேயான துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியைக் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பார்த்து மகிழ்ந்தார். தலையை முழுமையாக மொட்டையடித்து புதிய தோற்றத்தில் மைதானத்திற்கு வந்த அவரது புகைப்படங்களை இணையத்தில் வைரலாகியுள்ளன.
2027 ஐபிஎல்-மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் யார்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பும்ரா அல்லது திலக்வர்மாவை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் பதவி இல்லாமல், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. கேப்டன் பதவி மற்றும் பயிற்சியாளர்கள் தொடர்பான ஆலோசனைகளில் ரோகித் சர்மாவுடன் அணி நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா ஏ - நியூசி ஏ அணிகளுக்கு இடையே போட்டி
இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 3 நான்கு நாள் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அந்நாட்டு ஏ அணியுடன் 3 நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேன முதல் போட்டி, அக்டோபர் 24 முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved