news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சர்வதேச சகாப்தம், 21 ஆண்டுகள், GOOD BYE சொன்ன மெஸ்ஸி
tv

Also Watch

சர்வதேச சகாப்தம், 21 ஆண்டுகள், GOOD BYE சொன்ன மெஸ்ஸி

DULL மோடில் ஃபுட்பால் ரசிகர்கள்

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனும், அர்ஜெண்டினா அணியின் அசாத்திய ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, கால்பந்தாட்ட களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை முகம் வாட வைத்துள்ளது. 21 ஆண்டுகால சர்வதேச பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மெஸ்ஸி கால்பந்தாட்ட களத்திற்குள் வந்தது எப்படி? 2 தசாப்தங்களில் பல சோதனைகளை தாண்டி அவர் சாதித்தது என்ன?

அபார ஆட்ட திறமை
கால்பந்து வரலாற்றின் சாதனை புத்தகங்களை புரட்டி பார்த்தாலும், அதன் புள்ளி விவர பட்டியலை அலசி ஆராய்ந்தாலும் அதில் லியோனல் மெஸ்ஸியின் பெயர் இருந்தே தீரும். மைதானத்தில் மந்திரம் செய்யும் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி திரைப்பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள்வரை கோடிக்கணக்கான ரசிகர்களை தனது அபார ஆட்டத் திறமையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். மெஸ்ஸி என்ற பெயரே ஃபுட்பால் ரசிகர்களை உற்சாகமிகுதியில் புல்லரிக்க வைக்கும்.

ரசிகர்கள் கொண்டாடும்...
கால்பந்து உலகின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்,' அதிமானுடர், மந்திர புன்னகை கொண்ட மாயஜாலக்காரன், கால்பந்தின் கடவுள், காலசைவு கட்டழகு நாயகன், பந்தை உதைக்காமல் அதனுடன் உளமாற பேசும் வித்தகன், கால்பந்து மைதானத்தை தனது தூரிகையால் நேர்த்தியான ஓவியமாக மாற்றுபவர் என மெஸ்ஸியை ஒவ்வொரு ரசிகர்களும் ஒவ்வொரு விதமாக அழைத்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

இன்னல்கள், இடையூறுகள்...
தனி ஒரு ஆள், இத்தனை வர்ணனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவதெல்லாம் அத்தனை எளிதில் நடந்திருக்குமா என்ன? இதற்கு பின்னால் பல இடையூறுகளும், இன்னல்களும் இல்லாமல் இருந்திருக்குமா? ஆம்... அவரும் அத்தனையையும் ஒருசேர சந்தித்துள்ளார். அர்ஜெண்டினாவின் ரோசாரியோ நகரில் பிறந்த மெஸ்ஸி, நீவெல் ஓல்ட் பாய்ஸ் என்கிற கிளப்பிற்காக விளையாடி உள்ளார். ஆஜானுபாகுவான உடலமைப்பு இல்லாத அவரை சக வீரர்கள் குள்ளன் என எள்ளி நகையாடி உள்ளனர். தனது 11ஆவது வயதில் Growth Hormone Deficiency என்ற ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மெஸ்ஸி, 4 அடிக்கு மேல் வளரமாட்டார் என மருத்துவர்கள் குண்டை தூக்கிப்போட தினமும் இரவில் செயற்கை வளர்ச்சி ஹார்மோன் ஊசிகளை தனது காலில் தானே செலுத்திக் கொண்டார். தோராயமாக 900 முதல் 1500 டாலர்கள் வரை ஊசிக்கே செலவாக வறுமையின் பிடியில் இருந்த மெஸ்ஸியின் குடும்பத்தினரால் அதனை சமாளிக்க முடியவில்லை.

புகழாரம் சூடிய மெஸ்சி
சிறு வயதிலேயே கால்பந்து களத்தில் கண்முன் மேஜிக் செய்த மெஸ்ஸியின் திறமை பார்சிலோனா மருத்துவ கிளப்பை உற்றுநோக்க வைத்தது. மைதானத்தில் வித்தையை காட்ட வாய்ப்பு கொடுத்த பார்சிலோனா அணி மெஸ்ஸியின் மருத்துவ செலவுகளையும் ஏற்று உத்வேகம் அளித்தது.

அதன் விளைவாக அவரது உயரம் 5.7 அடி ஆனதோடு மெஸ்ஸியின் கால்பந்து உலகின் உயரமும் பல அடி உயர்ந்தது. 2004ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் பார்சிலோனா சீனியர் அணிக்காக அறிமுகமான மெஸ்ஸி, 2005ஆம் ஆண்டிலேயே லா லிகா கோப்பையை வென்றார். அதன்பிறகு அவருக்கு ஏறுமுகமும் தாறுமாறாக எகிற சச்சின், தோனி தொடங்கி பல விளையாட்டு வீரர்களே வெளிப்படையாகவே மெஸ்ஸியை புகழ்ந்து தள்ளினர்.

91 கோல் அடித்து கின்னஸ் சாதனை
கால்பந்து உலகில் நாயகனாக உருவெடுத்த மரடோனா 1986ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றார். அர்ஜெண்டினா இன்னொரு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மரடோனாவின் தீவிர ஆசையாக இருந்தது. அதேசமயம், மெஸ்ஸியை மரடோனாவுடன் ஒப்பிட்டதோடு அவரது நிழல் என்றும் வர்ணிக்க தொடங்கினர். தனது குருவான மாரடோனாவின் பத்தாம் எண் ஜெர்சியை அணிந்து, அவரது வாரிசாகவே கால்பந்து உலகில் வலம்வந்த மெஸ்ஸி 2022ஆம் ஆண்டு ஆசானின் கனவை நிறைவேற்றினார். இதற்கிடையில், 2012 ஆண்டில் மட்டும் 91 கோல் அடித்து கின்னஸ் சாதனை படைத்த மெஸ்ஸி, 47 வெற்றிக் கோப்பைகளை தனதாக்கி கால்பந்தாட்ட வரலாற்றை திரும்பி பார்க்க வைத்தார். 13 முறை ஆட்டநாயகன் விருதை வென்ற மெஸ்ஸி, உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா அணியை அதிக போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இதுதான் சரியான நேரம்
கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தின. இதில், மெஸ்ஸி தன் அணியை ஒற்றை ஆளாக இறுதிப்போட்டி வரை இழுத்துச் சென்றும், அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியோடு சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மெஸ்ஸி.

39 வயதாகும் அவர் தனது ஓய்வு குறித்து வெளியிட்டிருக்கும் பதிவில், நிச்சயம் இந்த முடிவு தனக்கு இன்னும் வலியையும், வேதனையும் தருகிறது, ஆனால் தான் ஓய்வை அறிவிப்பதற்கு இதுதான் சரியான நேரமென கருதுகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

சற்று ஆறுதல்...
நீலமும் வெள்ளையும் கலந்த ஜெர்சியிலிருந்து மெஸ்ஸி விடைபெற்றது ரசிகர்களை கடும் வருத்தத்தில் ஆழ்த்தினாலும் அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிக்காகத் தொடர்ந்து அவர் விளையாடுவார் என்ற அறிவிப்பு மட்டுமே அவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

Related Link
பிஃபா உலகக் கோப்பை, மகுடம் சூடிய ஸ்பெயின் அணி

பிஃபா உலகக் கோப்பை, மகுடம் சூடிய ஸ்பெயின் அணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

i10 NIOS சிறப்பு சலுகை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved