ஸ்பா சென்டரில் இளைஞரை அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பல். ஹனி ட்ராப் மூலம் சிக்க வைத்து அரக்கத்தனம். பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வீடியோ ரெக்கார்டு செய்து வெளியிடுவேன் என மிரட்டிய பெண் ஊழியர். பல கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று சீட்டிங் கும்பலை தட்டி தூக்கிய காவல்துறையினர். நடந்தது என்ன?ஸ்பாவில் அரங்கேறிய "ஹனி ட்ராப்" மோசடிகேரளா மாநிலம், திருவல்லாவுல இருக்குற ஒரு ஸ்பா சென்டர்ல, ஒரு சினிமா படத்தையே மிஞ்சிற அளவுக்கு ஒரு பகீர் சம்பவம் நடந்திருக்கு. கூட வேலை பாக்குற சக ஊழியர்னு கூட பாக்காம, ஒருத்தர ப்ளான் பண்ணி "ஹனி ட்ராப்" ல சிக்க வச்சு, அவர்கிட்ட இருந்த கார், நகைகள ஒரு கும்பல் கொள்ளையடிச்சிருக்கு. அந்த கும்பலோட மாஸ்டர் பிளான் என்ன? போலீஸ் அவங்கள எப்படி பிடிச்சாங்க அப்டிங்குறதுதான் ஹைலைட்டே.விஷ்ணுவிடம் மசாஜ் செய்து விடுமாறு கேட்ட மஞ்சுதிருவல்லாவுல இருக்குற ஸ்பால விஷ்ணு-ங்குற இளைஞர் வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. அதே ஸ்பால, மஞ்சு அப்டிங்குற ஒரு பெண்ணும் வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. விஷ்ணுவ விட மஞ்சுவுக்கு வயசு அதிகம். அதனால, விஷ்ணு அவங்கள அக்கான்னு சொல்லிதான் கூப்பிடுவாராம். இந்த சூழல்ல, சம்பவத்தன்னைக்கு மஞ்சு, விஷ்ணுகிட்ட, தம்பி, எனக்கு உடம்பு ரொம்ப வலியா இருக்கு, ஒரு பத்து நிமிஷம் மசாஜ் பண்ணி விடுறியான்னு கேட்டுருக்காங்க. விஷ்ணுவும், மஞ்சுவ ஒரு அக்கா முறையில பார்த்ததால, சரின்னு சொல்லி, அந்த ஸ்பாவோட கேபினுக்குள்ள போயிருக்காரு. ஆனா, அங்க தான் விஷ்ணுவோட வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு சம்பவம் நடக்க போது அப்டிங்குறது அவருக்கு தெரியல. Related Link காதலிக்காக... மனைவிக்கு நேர்ந்த கொடூரம் விஷ்ணு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி நாடகம்மசாஜ் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே மஞ்சு, கத்தி கூப்பாடு போட்டுருக்காங்க. அடுத்த நிமிஷமே கதவை உடைச்சுக்கிட்டு அந்த ஸ்பாவோட ஓனர் ஜெய்மோன்னும் அவரோட ஃபிரண்டு அஜயும் உள்ள போயிருக்காங்க. அப்படி உள்ள போனவங்க என்ன ஏதுன்னு விசாரிக்காம, என்னோட ஸ்பாலயே பொண்ணுகிட்ட தவறா நடந்துக்கிறியான்னு சொல்லி விஷ்ணுவ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல பயங்கரமா அடிச்சிருக்காங்க. விஷ்ணுகிட்ட இருந்த தங்க செயினையும், காரையும் பறிக்கிறதுக்காக, ஜெய்மோன்னும், அஜயும்தான் சேந்துதான் இந்த பிளானையே போட்டுருக்காங்க. 2 சவரன் நகை, காரை பறித்து கொண்டு தப்பியோட்டம்அதுக்குப்பிறகு, விஷ்ணுவ ஒரு தனி ரூம்ல அடைச்சு வச்சு சித்திரவதை பண்ண அந்த கும்பல், உன் மேல பாலியல் புகார் கொடுத்துருவோம், உன் மானமே போயிடும், உங்க குடும்பமே தூக்குல தொங்கிடும்னு சொல்லி அவர மிரட்டிருக்காங்க. நான் எந்த தப்பும் பண்ணல, எதுக்காக இப்படி பொய் சொல்றீங்கன்னு கேட்ட விஷ்ணு, என்ன விட்றுங்கன்னு கதறிருக்காரு. ஆனா, ஈவு இரக்கம் காட்டாத அந்த அரக்க கும்பல், விஷ்ணுகிட்ட இருந்து 2 சவரன் தங்க செயின், மொபைல் போன், அப்புறம் அவரோட கார் சாவி எல்லாத்தையும் பறிச்சிருக்காங்க. அறையில் இருந்து தப்பி போலீஸில் புகாரளித்த விஷ்ணுகடைசியில விஷ்ணுவ ரூம்லேயே வச்சு பூட்டி போட்டுட்டு, அந்த மூணு பேரும் அவரோட கார்லயே எஸ்கேப் ஆகிருக்காங்க. அந்த ரூம்ல இருந்து வெளியே வரமுடியாம தவியா தவிச்ச விஷ்ணு ஒருவழியா அங்க இருந்து தப்பிச்சு திருவல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கு வேர்த்து விறுவிறுக்க ஓடி போயிருக்காரு. அவரு ஓடி வந்தத பாத்த காவலர்கள், என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி ஓடி வர்றன்னு கேட்டு, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திருக்காங்க. அதுக்கப்புறம், கொஞ்ச நேரம் கழிச்சு விஷ்ணு தனக்கு நடந்த எல்லாத்தையும் போலீஸ்கிட்ட ஒன்னுவிடாம சொல்லிருக்காரு. காரில் இருந்த GPS மூலம் கும்பலை பின்தொடர்ந்த போலீஸ்விஷ்ணு கொடுத்த புகார் அடிப்படையில வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ்காரங்க, அந்த கும்பல பிடிக்க தேடுதல் வேட்டையில இறங்குனாங்க. ஆனா, அந்த கும்பல் எங்க போனாங்க அப்டிங்குறதுக்கான எந்த க்ளூவும் கிடைக்கல. அதுக்குப்பிறகு, விஷ்ணுவோட கார்ல இருந்த GPS-அ வச்சு போலீஸ் அவங்க மூவ் ஆகுற இடங்கள்ல ட்ராக் பண்ணிருக்காங்க. அப்போ, அந்த கும்பல் செங்கன்னூர் வழியா போயிட்டு இருந்தது தெரியவரவே, அந்த ஏரியாவ தங்களோட கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த போலீஸ், ஃபாலோ பண்ணிட்டே போய், அந்த கார மடக்கி நிறுத்திருக்காங்க. மூணு பேரையும் ரவுண்டு கட்டுன காவலர்கள், அரெஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்திருக்காங்க. அதோட, விஷ்ணுகிட்ட இருந்து பறிச்ச 2 சவரன் தங்க செயின், காரையும் மீட்டு அவருகிட்ட ஒப்படைச்சிருக்காங்க. Related Link வீட்டிற்கு அழைத்த காதலி, காத்துக் கொண்டிருந்த எமன்