news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை
tv

Also Watch

காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை

ரூ.5.96 கோடியில் காப்பீட்டுத்தொகை

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.

உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகையாக, ஐந்து கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

காவலர் வீர வணக்க நாள்...
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று அக்டோபர் 21ஆம் தேதி, சென்னை, காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், வீரமரணம் அடைந்த காவலர்களைக் கௌரவிக்கும் வகையில், காவலர் நினைவுச் சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ரூ.5.96 கோடியில்...
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த 6 காவலர்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலர் என்று, மொத்தம் 7 காவலர்களின் குடும்பங்களுக்கு,

தமிழ்நாடு அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ், தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் 5 கோடியே 96 லட்சம் ரூபாய்க்கான ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

முதல்வர் விஜய் பதிவு
இந்நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
1959ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்.

பல்வேறு சவால்களை...
இயற்கைப் பேரிடர், விபத்து, குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.

கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு,

காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்.
இவ்வாறு முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

Related Link
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசாக உள்ளது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved