கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் ஏராளமான வீடுகள் மற்றும் ரிசார்ட்டுகள் தீயில் எரிந்து சேதமானது.லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே உள்ள மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதில் சுமார் 40 க்கும் மேற்ப்பட்ட வீடுகள், ரிசார்ட்டுகள், வாகனங்கள் பற்றி எரிந்தன.புதன்கிழமை பிற்பகலில் 3 இடங்களில் பற்றிய காட்டுத்தீக்கு ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பற்றி எரிந்தததாக கூறப்படுகிறது.இது லாஸ் ஏஞ்சல்ஸின் மூன்றில் ஒரு பகுதி என கூறும் தீயணைப்பு துறையினர் பலத்த காற்று மற்றும் வெப்ப அலையின் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர்.