news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" என CM விஜய் பாணியில் பேசிய SK
tv

Also Watch

"மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" என CM விஜய் பாணியில் பேசிய SK

"I'm Not Self-Made, I'm People-Made"

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

"நான் செல்ஃப் மேட் கிடையாது, மக்களால் உருவாக்கப்பட்டவன்," என ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் முழங்கியதும், அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களும் தற்போது தமிழ் திரையுலகையும் தாண்டி, அரசியல் வட்டாரத்திலும் கவனைத்தை ஈர்த்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் அரசியல் என்ட்ரியை இந்த சம்பவம் அப்படியே ஞாபகப்படுத்துவதால், SKவும் அரசியலுக்கு ரூட் போடுகிறாரா? என்ற விவாதம் சோசியல் மீடியாவில் கொளுந்துவிட்டு எரிகிறது.

அரசியல் வட்டாரத்தில்...
’நான் எந்த சினிமா பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண பையன், என்னை இந்த இடத்திற்கு தூக்கி நிறுத்தியது மக்களே தவிர வேறு யாருமல்ல,’ என சென்னையில் நடைபெற்ற தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முழங்கியது, தற்போது தமிழ்த்திரையுலகை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

எளிய குடும்ப பின்னணி
ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பில், தனது ஆரம்ப கால வலிகளையும், போராட்டங்களையும் மேடையில் பகிர்ந்துகொண்டார் SK.

இந்த துறைக்குள் நுழையும்போது தனக்கு எந்த பின்புலமும் கிடையாது என்றும், 17 வயதிற்கு மேல் கையைப் பிடித்து வழிநடத்த தந்தை கூட இல்லாத ஒரு எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன் தான் என்றும் அவர் மனம் திறந்தபோது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டல்களால் அதிரவைத்தனர்.

உணர்ச்சி பொங்க...
தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சின்ன எபிசோட் செய்துவிட்டுப் போய்விடலாம் என்று தான் வந்ததாகவும், ஆனால் மக்கள் அதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக பார்க்காமல், நம்ம பையன் ஜாலியா பண்றான், இவனை ஊக்கப்படுத்துவோம் என்று கூறி தூக்கிவிட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும், நிறைய பேர் என்னை Self made என்று சொல்றாங்க, ஆனா, நான் Self made கிடையாது, நான் மக்களால் உருவாக்கப்பட்டவன் என்று மேடையில் உணர்ச்சிபொங்க முழங்கினார்.

உண்மையான பலம்...
மக்களிடமிருந்து பெற்ற அன்புக்கு பிரதிபலனாக சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தனது தந்தையின் பெயரில் ஜி.தாஸ் டிரஸ்ட் தொடங்கப்பட்டதாக அவர் விளக்கினார். மேலும், இந்த இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற நற்பணிகள் யாரையும் எதிர்ப்பதற்காகவோ அல்லது தங்களை பெரியவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காகவோ செய்யப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

எந்த ஊருக்கு ஷூட்டிங்கிற்கு சென்றாலும் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்பட்டதாக இதுவரை புகார் வந்ததே இல்லை என்றும், அந்த சீரான கட்டமைப்பும் கட்டுப்பாட்டும்தான் தங்களது உண்மையான பலம் என்றும் நிர்வாகிகளை பாராட்டினார்.

வீடியோ வெளியிட்ட எஸ்.கே.
இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் சிவகார்த்திகேயனின் நெற்றியில் திலகம் வைத்து ஆசீர்வதிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த எமோஷனலான காட்சிக்கு அவர் பயன்படுத்திய வாசகம் தான், தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்து உள்ளது. உலக பொதுமறையான, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்,’ என்ற திருக்குறள் வரிதான் அந்த வீடியோவின் ஹைலைட்டாக அமைந்துள்ளது.

பிரத்யேக வரி, குறியீடு
ஏற்கெனவே, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தங்கள் அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக, இதுபோன்று பிரத்யேக வரிகளையும் குறியீடுகளையும் கையில் எடுத்த வரலாறு இங்கு உண்டு. தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியபோது ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் வரியை முன்னிறுத்தினார். அதனை தொடர்ந்து, தனுஷின் ரசிகர் மன்ற கொடியில் ’எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற வாசகம் இடம்பெற்றது பெரியளவில் விவாதிக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத ’ஹாட் டாபிக்’
தற்போது, அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் தனது வீடியோவில் திருக்குறளை பயன்படுத்தி இருப்பது, இது சாதாரண ரசிகர் பாசமா? அல்லது எதிர்கால அரசியல் களத்திற்கான மறைமுக அச்சாரமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அடுத்தடுத்த படங்களின் மாஸ் அப்டேட்களையும் கொடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி வரும் சிவகார்த்திகேயனின் இந்த மூவ், தற்போதைக்கு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தவிர்க்க முடியாத ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Related Link
56ஆவது படபூஜையா? அரசியல் என்ட்ரியா? அதிரவிட்ட தனுஷ் ரசிகர்கள்

56ஆவது படபூஜையா? அரசியல் என்ட்ரியா? அதிரவிட்ட தனுஷ் ரசிகர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 5,285 பேரை இறந்ததாக அறிவிக்க முடிவு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved