Also Watch
Read this
வாக்களிக்காதவர்களும் வாக்களிக்கத் தவறிவிட்டோமே? என்று எண்ணும் படியான ஆட்சியை வழங்குவேன் என்று, சொன்ன சொல்லைக் காப்பாற்றி உள்ளேன் என, திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவரின் காணொலியை பகிர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

சொன்ன சொல்லை காப்பாற்றியுள்ளேன்
இதுதொடர்பாக, காணொலியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு;
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறி விட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொலியே சான்று.

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும். தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved