news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு
tv

Also Watch

கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் உச்சவரம்பு அதிகரிப்பு

கிராமுக்கு ரூ.10,000

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக்கடன் உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு கிராமுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை நகைக்கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில்...
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12%ல் இருந்து 13% ஆக உயர்த்தப்பட்டது. தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.7,000 என்றும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நகைக் கடன்கள் தொடர்பாகப் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:

கடன் அளவு உயர்வு
நகைக் கடன்களுக்கு ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வட்டி விகிதத்தில் சலுகை
மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் தங்களது சொந்தக் கிளை மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே வேறுபாடு நிலவி வந்தது.
இதனைச் சீரமைக்கும் வகையில், JL-CC PACCSக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம், DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதிய நகைகடன்களுக்கு...
அதே நேரத்தில், PACCSன் லாப வரம்பு Margin 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Link
ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,400 ரூபாய்க்கு விற்பனை

ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,400 ரூபாய்க்கு விற்பனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved