news-tamil-logo

3/16/2026, 8:10:43 PM

news-tamil-logo
more
Home news அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று

Posted on: Feb 27, 2026 03:23 AM

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில், ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்தது.
சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

* முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 256/4 ரன்கள் குவிப்பு
* ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 184/6 ரன்கள் எடுத்து தோல்வி
* அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி


நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், 5 ரன்னில் உலக சாதனையை இந்திய அணி தவறவிட்டது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக 256 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* டி20 WC கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணிகள்
* 5 ரன்னில் உலக சாதனையை தவறவிட்ட இந்திய அணி


இதற்கிடையே டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணியாக முதல் இடத்தில் இலங்கை அணி நீடித்து வருகிறது. 2007ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக 260 ரன்களை இலங்கை அணி குவித்துள்ளது.

* அதிக ரன்கள் குவித்த அணியாக முதல் இடத்தில் தொடரும் இலங்கை
* 2007ல் கென்யாவுக்கு எதிராக 260 ரன்களை குவிந்த இலங்கை அணி
* தற்போது 256 ரன்கள் எடுத்து இந்திய அணி 2-வது இடம்

இதற்கு அடுத்தபடியாக தற்போது 256 ரன்கள் எடுத்த இந்திய அணி 2ஆவது இடத்திலும் 254 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது இடத்திலும் உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 48 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved