news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வெற்றி மேடையில் இந்திய வீரர்கள், தமிழ்நாட்டுக்கு தனி இடம்
tv

Also Watch

வெற்றி மேடையில் இந்திய வீரர்கள், தமிழ்நாட்டுக்கு தனி இடம்

2023 & 2026 தமிழர்களின் பதக்க வேட்டை

37

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தமிழ்நாட்டுக்கு தனி இடம்

ஜப்பானில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்காக களமிறங்கிய தமிழக வீரர்கள் தங்களது திறமையை மீண்டும் நிரூபித்து அசத்தி உள்ளனர். கிரிக்கெட், தடகளம், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், 3 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளனர். ஹாங்சோவைத் தொடர்ந்து ஜப்பானிலும் தொடர்ந்த தமிழகத்தின் பதக்க வேட்டை குறித்துப் செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழர்களின் தனித்திறமை
ஆசிய விளையாட்டு அரங்கில் இந்தியக் கொடி உயரும்போதெல்லாம், அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பும் பட்டொளி வீசுகிறது. 2023ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து, 2026 ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது தனி திறமையை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளனர்.

11000 வீரர்கள் பங்கேற்பு
ஜப்பானில் உள்ள நகோயா நகரில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. 16 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 46 நாடுகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். 43 விளையாட்டுகளில் 469 பிரிவுகளில் பந்தயங்களும் நடத்தப்பட்டன.

நான்காவது இடத்தில் இந்தியா
இந்த போட்டிகளில், சீனா 169 தங்கம், 89 வெள்ளி, 83 வெண்கலம் என மொத்தம் 341 பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது.
83 தங்கம், 95 வெள்ளி, 91 வெண்கலம் என 269 பதக்கங்கள் உடன் ஜப்பான் 2ஆவது இடத்திலும்
39 தங்கம், 43 வெள்ளி, 68 வெண்கலம் என 150 பதக்கங்களைக் வென்று தென்கொரியா 3வது இடத்திலும்
21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்களை வேட்டையாடி இந்தியா 4வது இடத்தையும் பிடித்து அசத்தியது.

தமிழ்நாட்டிற்கு 16 பதக்கம்
இந்தியாவின் இந்த வெற்றிப் பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் 3 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

வியக்க வைத்த வித்யா ராம்ராஜ்
மகளிருக்கான 4x400 மீட்டர் ரிலே ஓட்டப் பந்தயத்தில் சூறாவளி போல சுழன்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

அதேபோல கலப்பு 4x400 மீட்டர் ரிலே ஓட்டப் பந்தயத்தில் வித்யா மற்றும் டி.கே.விஷால் ஜோடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது. மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அபாரமாகச் செயல்பட்ட வீராங்கனை, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அதுமட்டும் இல்லாமல் இந்தப் போட்டியில் 54.75 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டிய வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையைத் தகர்த்தெறிந்தார்.

கமலினி, வாஷிங்டன் சுந்தர்
கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முழு ஆதிக்கத்தைச் செலுத்தியது. மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை ஜி.கமலினியும், ஆடவர் பிரிவில் வாஷிங்டன் சுந்தரும் வெற்றி பெற்ற அணியில் ஒரு அங்கமாக இருந்து தங்கப்பதக்கங்களை அள்ளித் தந்தனர்.

தமிழகத்திற்கு பெருமை
இதேபோல, ஸ்குவாஷ் போட்டிகளிலும் 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்று தமிழக வீரர்கள் அசத்தி உள்ளனர். ஆடவர் தனிநபர் பிரிவில் அபய் சிங் இறுதிப் போட்டி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில்,

கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஜோடியும், மகளிர் குழுப் பிரிவில் ஷமீனா ரியாஸ் கூட்டணியும் வெண்கலம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர்.

தொடரும் அசத்தல்
இதுதவிர, பாய்மரப் படகோட்டப் போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணனும், பேட்மிண்டன் ஆடவர் அணி பிரிவில் தமிழக வீரர் ஹரிஹரன் வெண்கலம் வென்றனர்.

ஆனால், தமிழ்நாட்டு வீரர்களின் பதக்க வேட்டை 2026ல் தொடங்கியது அல்ல. 2023ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 5 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

அடுத்த தலைமுறைக்கான...
பதக்கங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், களம் கண்ட விளையாட்டுகளின் எண்ணிக்கையும், பதக்க மேடையைத் தொட்ட தமிழக வீரர்களின் பட்டியலும் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது.

ஆசிய விளையாட்டு அரங்கில் பதக்கங்களை வெல்வது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை வீரர்களுக்கான வெற்றிப் பாதையையும் தமிழக வீரர்கள் உருவாக்கி வருகிறார்கள் என்பதையே இந்த வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

Related Link
பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?

பழைய தங்கங்களைத் தக்கவைப்பதா? புதிய தங்கங்களை உருவாக்குவதா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் சஞ்சய் தத்தின் மேடை பேச்சால் சர்ச்சை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved