Also Watch
Read this
By: Web Team

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 604ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 464 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சுமார் 28 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்கி 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved