news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

பிளேஆஃப் நம்பிக்கையை தக்க வைத்த RR

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடி பந்துவீச்சு காரணமாக, மும்பை இந்தியன்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

ராஜஸ்தான் Vs மும்பை
ஐபிஎல் 2026 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முக்கியமான வெற்றியை பதிவு செய்து உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RR, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் வாய்ப்பை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

205 ரன்கள் குவிப்பு
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. துருவ் ஜுரேல் 38 ரன்கள், ஜோஃப்ரா ஆர்ச்சர் 15 பந்துகளில் 32 ரன்கள், தசுன் ஷணகா 29 ரன்கள் என அதிரடியாக விளையாடினர்.

இலக்கை துரத்திய மும்பை
206 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்திலேயே சிக்கலில் சிக்கியது. கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக வெளியேறியது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து போராடினார். ஹார்திக் பாண்ட்யா 34 ரன்கள், வில் ஜாக்ஸ் 33 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் பங்களிக்கவில்லை.

4 ஓவர், 17 ரன், 3 விக்கெட்
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் Jofra Archer அபாரமாக செயல்பட்டு 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நாண்ட்ரே பெர்கர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்களில் 175/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

4ஆவது இடத்தில்...
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் தொடர்கிறது. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலா 18 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 4ஆவது இடத்திலும் உள்ளதால் பிளேஆஃப் போட்டி பரபரப்பாகியுள்ளது.

Related Link
ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி

ஐபிஎல் 2026 டெல்லி கேபிடல்ஸின் அதிரடி வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை - முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவு

5
7 mins agoshare
முதல்வர் ஜோசஃப் விஜய் உத்தரவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved