news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news குழந்தை பேறு மட்டும்தான் லட்சியமா? விலங்கு, மனிதன் இடையே என்ன வித்தியாசம்?
tv

Also Watch

குழந்தை பேறு மட்டும்தான் லட்சியமா? விலங்கு, மனிதன் இடையே என்ன வித்தியாசம்?

மோகன் ஜி-யை விளாசிய கார்த்திக் சுப்பராஜ்

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டோரதி திரைப்படத்தின் வெற்றியும், அது பேசும் சமத்துவ கருத்துகளும் ஒருபுறம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், திருநங்கையிடம் இயக்குநர் மோகன் ஜி, பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், காதலுக்கும், அன்புக்கும் குழந்தைப்பேறுதான் அடையாளமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

டோரதி...
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோரின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் வெளியான படம் டோரதி. சமூகத்தில் இன்றும் ஒதுக்கி வைக்கப்படும் விளிம்புநிலை திருநங்கைகளின் அக உலகையும், அவர்களின் தூய காதலையும் வைத்து உருவான இப்படம், சினிமா பிரபலங்கள், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

வசூல் மழை பொழியும் இப்படத்திற்கு ரஜினி, மம்முட்டி, மணிரத்னம் போன்ற பிரபலங்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

டோரதி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியையும், அது பேசும் சமத்துவ கருத்துகளையும் சகித்து கொள்ள முடியாத சில தரப்பினர், இப்படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

விமர்சித்த மோகன் ஜி
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மோகன் ஜி, எல்லை மீறி வார்த்தைகளை விட்டது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நேகா என்ற திருநங்கையை நோக்கி, ’திருமணம் செய்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்களால் இயல்பாக ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியுமா?,’ என்று பொதுவெளியில் முகம் சுளிக்கும் வகையில் மோகன் ஜி கேள்வி எழுப்பினார்.

அதற்கு நேகா, ’ஒரு பையன் காதலித்து திருமணம் செய்தால் அன்போடு சேர்ந்து வாழ்வோம்,’ என பக்குவமாக பதிலளித்தபோதும், மோகன் ஜி விடாமல் மீண்டும் மீண்டும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவுமே கேள்விகளை கேட்டு அவமானப்படுத்தும் நோக்கில் நடந்து கொண்டார்.

வைரலான வீடியோ
திருநங்கை நேகாவிடம், மோகன் ஜி நடந்துகொண்ட இந்த அநாகரிகமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியது. இதை கண்டு கடும் கோபமடைந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், மோகன் ஜி-யின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ஆவேசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோ வெளியிட்ட இயக்குநர்
அதில், ’குழந்தைப் பேறு மட்டும்தான் லட்சியமா? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பல மருத்துவ காரணங்களால் குழந்தை பிறக்காமல் போகலாம். அதற்காக அவர்கள் அன்பை பகிர்வதற்கோ, ஒன்றாக வாழ்வதற்கோ தகுதியற்றவர்களா? விலங்குக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கேள்வி எழுப்பினார்.

’எனது படத்தை பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள், அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், கேமராக்களுக்கு முன்னால் ஒரு திருநங்கையை இப்படி ஆபாசமாகக் குடைந்து காயப்படுத்துவது அப்பட்டமான மனரீதியான வன்முறை. இதையெல்லாம் ஊடகங்களும் வேடிக்கை பார்க்க கூடாது,’ என்று அவர் சாடினார்.

கடுமையான சட்டங்கள்

’சாதி மற்றும் மத ரீதியாக தவறாக பேசினால் சட்டப்படி நடவடிக்கை பாய்வது போல, பாலின ரீதியாக ஒருவரை இழிவுபடுத்துவதை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்,’ என்றும் வலியுறுத்தினார்.

சமூகத்தில் விளிம்புநிலையில், வாழும் மனிதர்களின் மாண்பை காக்கும் காவியமாக ’டோரதி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போடும் அதேவேளையில், மோகன் ஜி போன்றவர்களின் பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும் ஆணாதிக்க மனநிலையையும் இந்த மோதல் தோலுரித்து காட்டியுள்ளது.

Related Link
ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐந்து நாட்கள் மிக கன மழைக்கு வாய்ப்பு

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved