news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?
tv

Also Watch

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

அதிமுகவும் வலை வீச்சு

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக தலைமையோட அதிருப்தியில இருக்கறதா சொல்லப்படுற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிமுகவும், பாஜகவும் வலைவிரிக்குதாம், அண்ணாமலை இடத்துல செந்தில் பாலாஜிய உட்கார வைக்க டெல்லி பாஜக முடிவு பண்ணியிருக்கறதா சொல்றாங்க.

திமுக கட்சி மேலிடத்தோட அதிருப்தியில இருக்கிறார்னு கேள்விப்பட்டு அதிமுகவும், பாஜகவோட டெல்லித் தலைமையும் செந்தில்பாலாஜியை வளைக்க தீவிர முயற்சிகள எடுத்துக்கிட்டிருக்காம்.

இன்னொரு பக்கம் வழக்குல தீவிரப்படுத்தி அரசியல்ல அவரை முடக்குறது தவெகவோட முக்கிய அஜெண்ட்டாவாம்.

இந்த சூழ்நிலையிலதான், வேலுமணி இடத்துல செந்தில்பாலாஜிய வெச்சுப்பார்க்க எடப்பாடியும், அண்ணாமலையோட இழப்பை ஈடுசெய்ய டெல்லி பாஜகவும் செந்தில்பாலாஜிகிட்ட நெருங்க முயற்சி செய்யறதா தகவல்கள் கசியத்துவங்கியிருக்கு. தவெக ஆட்சிக்கு எதிராக செந்தில்பாலாஜி மூலம் சில காய்கள நகர்த்த அமித்ஷாவே முடிவு செஞ்சிருக்கறதா கூட பேசிக்கறாங்க.

கரூர் வட்டாரமோ, இதெல்லாமே தங்களுக்கு எதிரான வழக்குகளுக்கு உதவும்னு நினைக்குதாம், வழக்குகளோட தீவிரத்த பொறுத்து செந்தில்பாலாஜியோட முடிவு இருக்குமாம்,

இப்போதைக்கு டெல்லி பாஜக பார்வை செந்தில் பாலாஜி மேல ஆழமா பதிஞ்சிருக்காம். அதே சமயம் திமுக மேலிடமும் செந்தில்பாலாஜியோட நடவடிக்கைகளை கவனிக்கத் துவங்கியிருக்காம், ஆனா இதுவரைக்கும் அவருக்கு சட்டரீதியான எந்த உதவியையும் அறிவாலயம் செஞ்சு கொடுக்கலையாம்.

Related Link
சேகர்பாபு வசம் சிக்கிய ரகசியங்கள்?

சேகர்பாபு வசம் சிக்கிய ரகசியங்கள்?

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved