news-tamil-logo

3/14/2026, 10:32:48 PM

news-tamil-logo
more
Home news தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு
tv

Also Watch

tv

Read this

தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு

வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 குறைந்தது

Posted on: Mar 14, 2026 04:38 AM

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-09 தங்கம், வெள்ளி விலை
ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மார்ச்-10 தங்கம் விலை ரூ.800 உயர்வு
ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,20,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனை ஆனது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-11 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், மார்ச் 11ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-12 தங்கம், வெள்ளி நிலவரம்
சென்னையில், இன்று மார்ச் 12ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,970 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்13 தங்கம், வெள்ளி விலை
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்று மார்ச் 14 விலை சரிவு
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 140 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
09 மார்ச் - ரூ.1,19,600
10 மார்ச் - ரூ.1,20,400
11 மார்ச் - ரூ.1,20,960
12 மார்ச் - ரூ.1,19,760
13 மார்ச் - ரூ.1,19,200
14 மார்ச் - ரூ.1,18,080 - இன்று காலை


Related Link
முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 39 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved