கண்ணழகியை தேடி வந்த பாலிவுட் பட வாய்ப்பு கும்பமேளாவில் பாசி மாலை விற்பனையால சமூக ஊடகங்கள்ல பிரபலமான மோனாலிசா தன்னோட முதல் படத்த ஒப்பந்தம் செய்திருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. இந்தூரைச் சேர்ந்த மோனலிசா உத்தரபிரதேசத்தில நடந்து வரும் கும்பமேளாவில பாசி மாலை , ருத்ராட்ச மாலை விற்பனை செய்து வந்த நிலையில பார்த்தவுடன் வசியம் செய்யும் கண்கள், மாநிறத்துடன் உள்ள அழகு தோற்றம் என பார்ப்பவர்களை சொக்க வைத்த இவரது வீடியோ சமூக வலைதளங்கள்ல வெளியாகி வைரலாகியிருந்தது. இந்த நிலையில மோனாலிசா வைரலான 10 நாட்கள்ல 10 கோடி ரூபாய் சம்பாதிச்சிருக்காங்கனு தகவல் பரவி வந்த நிலையில அதுக்கு வீடியோ ஒன்னு வெளியிட்டு முற்று புள்ளி வச்சிருந்தாங்க, மோனாலிசா.இந்த நிலையில பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மணிப்பூரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட டைரி ஆஃப் மணிப்பூர் திரைப்படத்தில மோனாலிசாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இந்த படத்துல மோனாலிசா ஒரு முக்கிய பாத்திரத்தில நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுது. இதுதொடர்பா மோனாலிசா வீட்டுக்கு நேரடியா போன இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அவரை சந்திச்சி பேசியிருக்காராம். ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தோட படப்பிடிப்பு பிப்ரவரியில தொடங்கி மார்ச் அல்லது ஏப்ரலில் முடிவடையும் எனவும், அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுது.. பிரபல இயக்குநருடன் இணையும் தில் ராஜூ கேம்சேஞ்சர் படத்தின் தோல்விக்குப் பிறகு, தில் ராஜு அடுத்ததா மிகப்பெரிய படத்துக்காக ஒரு பெரிய இயக்குனருடன் இணைய இருப்பதா தகவல் வெளியாகியிருக்கு. விஜய்யின் ‘வாரிசு’ படத்தை தயாரித்ததன் மூலமா தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தில் ராஜு. இவரது தயாரிப்பில ஷங்கர் இயக்கத்தில ராம் சரண் நடித்து வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இந்த படம் ஜனவரி 10 ந்தேதி வெளியான நிலையில படம் எதிர்மறை விமர்சனங்கள பெற்று எதிர்பார்த்த வெற்றிய ஈட்டலைனுதா சொல்லனும். இதனால பெரும் நஷ்டத்தையே சந்திச்சிருந்தாரு தயாரிப்பாளர் தில் ராஜு. இந்த நிலையில தில்ராஜு அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கும் படத்தைத் தயாரிக்கப் போறதா தகவல் வெளியாகியிருக்கு. இந்த படத்துக்கான ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாவும்,இந்த படம் 2027ம் ஆண்டு கதைக்களமாக உருவாக இருப்பதா சொல்லப்படுது. மேலும் இந்த படத்துல ஹீரோவாக யார் நடிக்கபோறாங்க என்பது இனிமேல் தான் அறிவிக்கப்பட இருக்கு.. அகத்தியா ரிலீஸ் தேதி வெளியிடு‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தின் மூலம் இயக்குநரா அறிமுகமான பாடலாசிரியர் பா.விஜய்,அந்த படத்தைத் தொடர்ந்து 2018 ல வெளியான ‘ஆருத்ரா’ படத்தை தானே இயக்கி நடிச்சிருந்தாரு. இந்த படங்களோட வெற்றியைத் தொடர்ந்து பா.விஜய் - ஜீவா கூட்டணியில உருவாகியிருக்கும் படம் தா ‘அகத்தியா’. இந்த படத்துல ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜூன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க. ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் என கலவையில் உருவாகும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ் ஆகியோர் இணைஞ்சி தயாரிச்சிருக்காங்க. இந்த படம் இந்தமாதம் இறுதியில வெளியாகும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில படத்தின் விரிவான VFX வேலைகள் எஞ்சி இருப்பதால படத்தோட ரிலீஸ் தேதி தள்ளிபோயிருந்தது. தற்போது படத்தோட ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிச்சிருக்கு அதன்படி, பிப்ரவரி 28ந்தேதி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகள்ல பிரம்மாண்டமா தியேட்டர்ல வெளியாகும் என படக்குழு அறிவிச்சிருக்கு. கராத்தே பாபு - கணேஷ் பாபு சுவாரசிய அப்டேட்டாடா படத்தின் மூலம் பிரபலமானவரு இயக்குநர் கணேஷ் கே பாபு. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபல நடிகர் ரவி மோகனை வச்சி ‘கராத்தே பாபு’ படத்த இயக்கி வந்துட்ருக்காரு. இந்த படத்துல டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இருக்காங்க. இவங்களோட முக்கிய வேடங்கள்ல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிச்சிருக்காங்க. சாம் சி எஸ் இசையில உருவாகி வரும் இந்த படத்த ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிது. இந்த நிலையில படத்த பத்தி இயக்குநர் கணேஷ் கே பாபு பேசியிருப்பது வைரலாகியிருக்கு. அதில "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்துருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படல. ஆனா கராத்தே பாபு அரசியல்வாதிகளின் மனிதப் பக்கத்தை research பன்றதா இருக்கு. அதுமட்டுமில்லாம, அரசியல் வாதிகளோட வாழ்க்கையில நமக்கு தெரியாம நடக்கும் விஷயங்கள், கதாநாயகன் மற்றும் எதிரி இருவரின் தொழில், அரசியல் பத்தி பேசும் படமாக இருக்கும் என தெரிவிச்சிருக்காரு.மகளே எந்தன் தாயாகபாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவர் கவிஞர் சினேகன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ள சினேகன் யோகி, உயர் திரு 420, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்கள்ல நடிச்சிருக்காரு. திரைக்கு பின்னால பாடல் ஆசிரியராக மட்டுமே ஜொலித்து வந்த சினேகனை மக்கள் மத்தியில அடையாளம் காட்டியது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதுல சிறப்பாக விளையாடிய சினேகன் நிகழ்ச்சியில இருந்து வெளியே வந்ததும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில சேர்ந்து அரசியல்வாதியா மாறினாரு. இதைத்தொடர்ந்து 2021ல சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலிச்சி திருமணம் செஞ்சிக்கிட்டாரு கவிஞர் சினேகன். திருமணத்துக்கு பின்னாடி பலரும் பொறாமை கொள்ளும் ஜோடியாக வாழ்ந்து வரும் இந்த ஜோடி தற்போது அவர்களின் காதலின் அடையாளமா இரண்டு தேவதைகளுக்கு பெற்றோராக மாறியிருக்காங்க. இது தொடர்பா சினேகன் - கன்னிகா தம்பதியர் சமூக வலைதளத்தில இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியான தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவிச்சிருக்காங்க.இதைதொடர்ந்து இரட்டை குழந்தைக்கு தந்தையான சினேகனுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிச்சிருக்காங்க. சினிமாவில் இருந்து விலகும் அதிதி ஷங்கர்பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில வெளிவந்த விருமன் படத்தின் மூலமா தமிழ் சினிமா திரையுலகில கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தாங்க. இந்தபடம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைஞ்ச நிலையில அதிதிக்கு நல்ல வரவேற்பு கிடச்சிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனோடு மாவீரன் படத்தில கதாநாயகியாக நடிச்சிருந்தாங்க. படம் வெற்றியடைஞ்சிருந்தாலும் அதிதியோட நடிப்பு இயல்பா இல்லானு விமர்சனங்களும் எழுந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில சமீபத்தில வெளிவந்த நேசிப்பாயா திரைப்படம் மக்கள் மத்தியில எதிர்பார்த்த வரவேற்பை பெறல. இந்த நிலையில அதிதி சமீபத்திய பேட்டில இயக்குநர் ஷங்கர் தனக்கு விதித்த நிபந்தனை குறித்து பேசியிருக்காங்க. அது என்னனா? மருத்துவ படிப்பு முடிஞ்சதும் நடிக்க முயற்சிப்பேன் என அதிதி சொல்ல அதுக்கு ரொம்ப நேரம் யோசிச்ச ஷங்கர், படத்துல தான் வெற்றி பெறலனா மருத்துவத்துக்கே திரும்பிரனும்னு நிபந்தனை போட்டதா சொல்லியிருக்காங்க. இது குறித்து வீடியோ வெளியான நிலையில அதிதி இனிமே படத்துல நடிக்க மாட்டாங்களா என கேள்வி எழுப்பி வந்துட்ருக்காங்க நெட்டிசன்ஸ்கமல் ரிட்டர்ன்ஸ் - அள்ளிக்கொடுத்த அப்டேட்ஸ்ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க அமெரிக்கா போயிருந்த கமல்ஹாசன், தன் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிட்ருக்காரு.நடிகர் கமல் ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி AI தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா போயிருந்தாரு. கடந்த 5 மாசமா படிப்பில கவனம் செலுத்திய கமல்ஹாசன் இன்னக்கி சென்னை திரும்பியிருந்தாரு. அப்போது, சென்னை விமான நிலையத்தில செய்தியாளர்களை சந்தித்து பேசின கமல்ஹாசன் படத்தை குறித்த அடுக்கடுக்கான அப்டேட்ட வெளியிட்ருக்காரு. அதன்படி,தனது தக் லைஃப் படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகுது என கூறியிருக்காரு. மேலும், விக்ரம் 2 வருமா என பத்திரிகையாளர் கேள்வி கேட்க "இல்ல இல்ல வேற ஸ்கிரிப்ட் எழுதி வந்துட்டு இருக்கேன்" என தெரிவிச்சிருக்காரு. அவர் சொன்ன அந்த புது ஸ்கிரிப்ட், அன்பறிவு இயக்கும் புதிய படத்திற்கானதாக கூட இருக்கலாம் என சொல்லப்படுது. இந்த நிலையில கமல்ஹாசன் கைவசம் தற்போது தக் லைஃப், இந்தியன் 3, கல்கி 2, அன்பறிவு இயக்கும் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.https://www.youtube.com/embed/gL0hIuDpDJM