news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உதயநிதிக்கு செக் வைக்கும் கனிமொழி? கனிமொழி அணிக்கு தாவும் சீனியர்கள்
tv

Also Watch

உதயநிதிக்கு செக் வைக்கும் கனிமொழி? கனிமொழி அணிக்கு தாவும் சீனியர்கள்

திமுகவின் கோட்டையை பிடிக்க போவது யார்?

45

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உதயநிதியின் தன்னிச்சையான ஆதிக்கத்திற்கும், இளைஞரணி கட்டுப்பாட்டுக்கும் எதிராக கனிமொழி தரப்பு கையில் எடுத்துள்ள வியூகங்கள், திமுகவின் அதிகார மையத்தை அதிர வைத்திருக்கிறது.

மாவட்டச் செயலாளர்கள் நியமன போர், தொடரும் தேர்தல் தோல்விகள், ஓரங்கட்டப்பட்ட சீனியர்களின் அணிமாறுதல்கள் என அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி நகர்வுகள், கனிமொழியின் பின்னால் வலுவான முகாமை உருவாக்கி திமுகவின் அடிமட்ட கட்டமைப்பில் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. கட்சி கோட்டையின் அஸ்திவாரமான மாவட்ட கட்டமைப்புகளில் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் இரு அணிகளுக்கும் இடையே மறைமுகமாக அரங்கேறிவரும் உட்கட்சி பூசல்கள் என்ன?

திமுக கோட்டையில்...
திமுகவின் அதிகார மையத்தில் வெடித்துள்ள அரசியல் பூகம்பம் கட்சியின் அடித்தளத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின், கனிமொழி இடையே பல நாட்களாக திரைமறைவில் ஓடிக்கொண்டிருந்த பனிப்போர், தற்போது அரசியல் திருப்பங்களுடன் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உதயநிதி அணி என்றும், கனிமொழி அணி என்றும் இரு துருவங்களாக பிரிந்து நின்று களமாட தொடங்கியிருக்கிறார்களாம்.

அசைக்க முடியாத சக்தி
கலைஞர் இருந்தவரை திமுகவில் அசைக்க முடியாத சக்தியாகவும், தனது ஆதரவாளர்களுக்கு சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் சீட் பெற்று தருபவராகவும் வலம் வந்த கனிமொழியின் செல்வாக்கு, மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றதும் சற்று சரிய தொடங்கியது. இதனால், கனிமொழியின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட பல சீனியர்கள் அணி மாறினர்.

ஆனால், கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி சந்தித்த தோல்விக்கு பிறகு, உதயநிதியை தொடர்ந்து முன்னிலைப்படுத்த காய்நகர்த்தப்பட்டு வரும் முயற்சிகளுக்கு கனிமொழி மிக தீவிரமாக முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம். குறிப்பாக, திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77லிருந்து 110 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் தனது இளைஞரணி ஆதரவாளர்களை குவித்து ஒட்டுமொத்த கட்சியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைக்கிறாராம் உதயநிதி.

உட்கட்சி தேர்தல் நடத்தி...
ஆனால், இதற்கு செக் வைக்கும் விதமாக, எந்த காரணத்தை கொண்டும் நேரடி நியமனங்கள் கூடாது, முறையான உட்கட்சி தேர்தல் நடத்தி ஜனநாயக ரீதியாகத் தான் மாவட்டச் செயலாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என கனிமொழி தரப்பு தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறதாம். இந்த உள்கட்சி சண்டையை மேலும் பற்றவைக்கும் விதமாக அமைந்ததுதான் சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.

திமுக படு தோல்வி ஏன்?
கடந்த சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் பரந்தாமனுக்கு சீட் கொடுக்காமல் தமிழன் பிரசன்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உதயநிதியோ பரந்தாமனை மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கினார். அதேபோல், தாராபுரம் தொகுதியில் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய இளைஞரணி அமைப்பாளர் மாணிக்கவாசகத்தின் மனைவி சுகன்யாவுக்கு சீட் வழங்கப்பட்டது. ஆனால், உதயநிதியின் தன்னிச்சையான இந்த முடிவுகளும், உள்கட்சியில் நிலவிய கடும் முரண்பாடுகளும் கை கோர்க்காததால், இந்த 2 தொகுதிகளிலும் திமுக படுதோல்வியை சந்தித்தது.

உதயநிதியின் நேரடி ஆதரவாளர்களாக களமிறக்கப்பட்ட இவர்கள் இருவரும் படுதோல்வி அடைந்தது உதயநிதி தரப்புக்குரிய பலத்தை தகர்த்திருப்பதுடன், கனிமொழி தரப்புக்கு மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது. இதற்கிடையில், உதயநிதியால் ஓரம் கட்டப்பட்ட சீனியர்கள் பலரும் வேறு வழியின்றி கனிமொழியின் பக்கம் தஞ்சம் புக தொடங்கியிருக்கிறார்களாம்.

கனிமொழி பக்கம்...
குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் சேகர்பாபு தான் என்று கருதிய உதயநிதி, அவரை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துள்ளாராம். இதனால், கடும் அப்செட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சற்றும் தாமதிக்காமல் கனிமொழியின் பக்கம் சாய்ந்திருப்பதாக கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் வெளிப்பாடாக, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவை முன்னின்று பிரம்மாண்டமாக நடத்தியவரே சேகர்பாபுதான். உதயநிதியால் புறக்கணிக்கப்பட்ட சேகர்பாபு, கனிமொழியின் தோளோடு தோளாய் நின்று இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி, திமுக மேலிடத்திற்கு ஒரு அரசியல் மெசேஜை பாஸ் செய்துள்ளார்.

உதயநிதி vs கனிமொழி
திமுகவின் உள்கட்டமைப்பில் உதயநிதி மற்றும் கனிமொழி அணிகளுக்கு இடையே உருவாகியுள்ள அதிகார போட்டி, சாதாரண ஒரு பனிப்போரை தாண்டி எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் பெரும் திருப்பமாக மாறியிருக்கிறது.

தேர்தல் பின்னடைவு, மேடைகளிலேயே வெளிப்பட்ட அதிருப்தி பேச்சு உள்ளிட்டவை தலைமைக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கியுள்ள நிலையில், இந்த உட்கட்சி மோதல்கள் மற்றும் புதிய அணிசேர்க்கை திமுகவின் அடுத்த கட்ட அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Link
மாசெ தேர்தலை மட்டும் தள்ளிப்போடுங்க, மூக்கை நுழைக்கும் மூத்த நிர்வாகிகள்

மாசெ தேர்தலை மட்டும் தள்ளிப்போடுங்க, மூக்கை நுழைக்கும் மூத்த நிர்வாகிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உதயநிதிக்கு செக் வைக்கும் கனிமொழி? கனிமொழி அணிக்கு தாவும் சீனியர்கள்

44
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved